பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/446

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறுவகை உயிர்ப் பாகுபாடு 423 தற்கு முதற் காரணமாக அமைந்துள்ளது. கற்பனையே படைப் பாற்றலின் அடிப்படையாகும். ஆக்க நிலைக் கற்பனையே இதில் பெரும் பங்கு கொள்ளுகின்றது. கவிதை, இசை, ஓவியம் போன்ற துறைகளிலும் அறிவியல்கள் போன்ற துறைகளிலும் மனிதனுடைய கற்பனையின் செல்வாக்கை அறியலாம். இவைபற்றிய பல விவரங் களை அறிஞர் நூல்களில் கண்டு கொள்க.சி - மன ஆற்றலின் காரணமாகவே மனிதன் மொழியைப் படைத்துக்கொண்டான். அவன் படைத்த மொழி, உணர உணர்த்த லும், உணர்த்த உணரலும் என இருவகை அறிவியக்கத்திற்குப் பயன்படுகின்றது. அவன் கண்ட மொழியும் அவ்வியக்கத்திற்கேற்ற சொற்களாகிய குறியீடுகளின் அமைப்பினைக்கொண்டு சிறந்த முறையில் இயங்கி வருகின்றது. இம்முறையிலமைந்த மொழியும் அவனுடைய அறிவு வளர்ச்சிக்கு மேலும் அடிப்படைக் காரணமாக அமைகின்றது. இதன் காரணமாகவே, படிவளர்ச்சி ஏணியில் மனிதன் கொடுமுடியில் அமர்ந்திருக்கின்றான். 41. Edmund W. Sinrott } Mattex, Mind and Man pp. 102 - 150.