பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/447

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை ஒரு காட்டு மக்களின் பண்டைய வரலாற்றினையும் வாழ்க்கை முறையையும் நாகரிகத்தையும் உணர்வதற்கு அங் நாட்டில் காணப்பெறும் கல்வெட்டுகள், செப்புப் பட்டயங்கள், கிலத்தின்கீழ்ப் புதைக்த கட்டட வகைகள், பண்டைய காணயங்கள், அங்காட்டில் வழங்கும் பண்டைய இலக்கியங்கள் முதலியவைகள் கருவிகளாக உதவுகின்றன. கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றி மூத்த குடியில் முகிழ்த்த தமிழரின் வரலாற்றினை அறிவதற்கு இலக்கியக் கருவூலமாக இருப்பது நம் செக்தமிழ் மொழிக்கு ஒரு கந்தாயணி விளக்காய்த் திகழும் தொல்காப்பியம் என்னும் முழு முதல் நூலாகும். இந்த நூல் பண்டைய தமிழ் நூல்களுக்கு இலக்கணம் கூறும் நூலாக இருப்பினும் அதில் காணப்பெறும் பல குறிப்புகள் கம அருங் தமிழ் மக்களின் பெருந்திரு நாகரிக வரலாற்றினை முற்றும் எடுத்து முடியக் கூறுவதற்குப் பெருந்துணை புரிகின்றன. நாகரிகம் என்பது அக காகரிகம், புத நாகரிகம் என இருவகைப் படும். அவற்றுள் முன்னது அன்பு என்னும் நெகிழ்க் த இயற்கை யினை அடிப்படையாகக்கொண்டு நடைபெறும், பின்னது செல்வம்’ என்னும் வன்பொருளினை அடிப்படையாகக்கொண்டு. நிகழும், அகத்தே கடைபெறும் அன்பொழுக்கம் மேன்மேல் உரம் பெற்று வளர்வதற்குப் புறத்தேயுள்ள செல்வம் துணை புரியும் முறையில் ஒழுகும் மக்களிடத்தில்தான் இருவகை நாகரிகங்களும் ஒன்றோடொன்று முரண்படாமல் ஒருங்கொத்து நடைபெறும் , அவர்கட்கும் இம்மை மதுமை இன்பங்களை நிரம்ப ஊட்டி அவர்தம் வாழ்வினை வளமாக்கும. அங்ங்னமன்றி, புறத்தேயுள்ள செல்வம் அகவொழுக்கமான அன்பு வளர்ச்சிக்குத் துணைபுரியாமல், அன்பு சென்றவழி தான் செல்லாமல், அதற்கு அடங்கி கடவாமல்,தன்னை மறந்து கூத்தாடுமாயின், அது நாகரிகத்தினை அழித்துவிடும் கூற்றுவனாகவே மாறிவிடும். இத்தகைய போக்கிற்கு இடங் கொடுக்கும் மக்களிடையே அககாகரிகமும் புறநாகரிகமும் ஒன்றோடொன்று ம | று ட ட் டு அவர்தம் இம்மையின் பங். களையும் பெறவொட்டாமல் அவர்க்குப் பெருந்துன்பங்களை விளைவித்துச் சில நூற்றாண்டுகளில் அவர்களை அடியோடு மறைய வைத்துவிடும். இங்ங்ணம் செல்வத்தில் தருக்கிய காரணத்தால்தான் தமிழ் மக்களோடொத்த பழம் பெருஞ்சிறப்பினையுடைய