பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/448

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை 425. எகுபதியர், பாபிலோனியர், அசிரியர், மெக்சிகர் முதலானோர் அடியோடு மாய்ந்து போயினர் : அவர் வழங்கிய மொழிகளும் அவர் கட்டிய எழுகிலை மாடங்களும் இருந்த இடம் தெரியாமல் அழிக் தொழிந்தன. முன் கிற்க வேண்டிய அன்பு பின்கிற்கவும் பின் கிற்க வேண்டியசெல்வம் முன் கிற்கவும் சிறிதளவும் முறை மாறி வழுவிய காணத்தால்தான் தமிழ் மக்கள் தம் பண்டைப் பெருமையி னின்றும் குறைந்துவிட்டனர். ஆயினும், ஒருசில சான்றோ? இன்றும் பண்டைப் பீடுடன் உள்ளனர்; அவர் வழங்கிய மொழியும் அழியாது - கன்னித் தமிழாய் - கின்று நிலவுகின்றது. அம். மொழியில் இயற்றப்பெற்ற நூல்களும் இறவாது புத்துயிர் பெற்றுப் பொலிகின்றன. தொல்காப்பியத்தில் கூறப்பெறும் செய்திகள் யாவும் பழைய உலக வழக்கையும் செய்யுள் வழக்கையும் அடிப்படையாகக் கொண்டு விளக்கப்பெறுகின்றன. மக்கள் வாழ்க்கையில் இயல்பாகக் காணப்பெறும் ஒழுக்கம் உலக வழக்கு என்றும், அவ்வுலக வழக்கில் சிறந்தனவாயுள்ளவற்றைத் தேர்ந்தெடுத்துப் பிற்கால மக்களின் உலக வழக்கு சிறப்பர்க நடைபெறுதற்பொருட்டுப் புலவர்களால் பலபடப் புனைந்துசெய்யப்பெறுவது நாடக வழக்கு" என்றும் வழங்கப்பெறும். இந்த இருவகை வழக்குகளும் கலக்ததே செய்யுள் வழக்கம் ஆகும். ஆசிரியர் தொல்காப்பியனாரே இவற்றை, 5ாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம்! என்ற நூற்பாவில் குறிப்பிடுவர். எனவே, தொல்காப்பியம் பண்டைத் தமிழரின் வாழ்க்கையைப் பாங்குற எடுத்துக் காட்டும் ஒர் ஒப்புயர்வற்றி விழுமிய நூல் என்பது பெறப்படும். இத்தகைய நூலில் காணப்பெறும் ஒருசில குறிப்புகளைக்கொண்டு பண்டையோர் வாழ்க்கை முறையை ஒரு சிறிது விளக்கிக் காட்டுவோம். - வாழ்க்கை கலம் ஒரு நாட்டு மக்களின் வாழ்க்கை கலத்தை அறிவதற்கு அக் காட்டு மக்களின் கருத்து வளம் அளவுகோலாக அமைகின்றது. இக்கருத்து வளத்தை அக்காட்டு மக்களின் இலக்கியங்களில் காணலாம். இத்தகைய கருத்து வளத்தைக் கொண்ட இலக்கியங் 1. அகத்தினை - நூற் 56 (இளம்.)