பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/449

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆ28 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை கட்கும், வாழ்க்கை இயல்பிற்கும் இலக்கணம் கண்ட பெருமை தமிழ் மொழியிலேயன்றி வேறு எம்மொழியிலும் காணப்பெறாத சிறப்புடையதாகும். Aக்கள் வாழ்க்கையின் இயல்பினையும் பிற வற்றையும் ஒல்காப் பெரும் புகழ்த் தொல்காப்பியம் என்னும் நூல் வகைப்படுத்தித் திறம்பட உரைக்கின்றது. அந்நூல் மக்கள் வாழ்வினை அகவாழ்வு, புறவாழ்வு என இரு கூறிட்டுப் பேசு கின்றது. அகவாழ்வினைப்பற்றிக் கூறுவது அகத்திணை: புறவாழ்வினைப்பற்றிப் புகல்வது புறத்திணை. திணை என்பது: ஒழுககம். அகத்திலே - அதாவது மனத்திலே - நிகழும் ஒழுக்கம்: அகத்திணை: புறத்திலே நிகழும் ஒழுக்கம், புறத்திணை. இவற்றை அகப்பொருள் என்றும், புறப்பொருள் என்றும் வழங்குவதுண்டு. அகவாழ்வு ஒத்த அன்புடைய கணவனும் மனைவியும் கலந்து வாழும் குடும்பவாழ்வே அகவாழ்வாகும். அகவொழுக் கத்தை ஐக்திணை, கைக்கிளை, பெருந்திணை என எழு வகை பாகப் பாகுபடுத்திப் பேசுவது மரபு. கைக்கிளை முதலாப் பெருந்தினை இறுவாப் முற்படக் கிளந்த எழுதினை என்ப. . என்பது தொல்காப்பிய அகத்தினை நூற்பா. ஒத்த அன்புடைய ஒருவனும் ஒருத்தியுமாகிய காதலர் இருவர், கருத்தொருமித்து இல்லிருந்து நல்லறஞ் செய்வதற்கு இன்றியமையாத அன்பின் வழிப்பட்ட உள்ளத்துணர்ச்சியே ஐந்திணை என்று வழங்கப் பெறும்.இன்ப வாழ்விற்கு அன்பு இன்றியமையாத பெருவிசையாக யாக இருப்பதால், இஃது அன்பின் ஐந்திணை என்று சிறப்பிக்கப் :படலாயிற்று. தலைவன் தலைவி என்னும் இருவரும் தம்முட்கூடி மகிழ்தலும், உலகிற் கடமை கோக்கித் தலைவன் சின்னாள் தலைவியைப் பிரிந்துசெல்லுதலும், தலைவன் திரும்பிவிடுவதாகக் குறித்த காளளவும் தலைவி பிரிவுத் துன்பத்தைப் பொறுத்துக் கொண்டு ஆற்றியிருத்தலும், கணவன் குறித்த காளில் வரத் காமதிப்பின் ஆற்றாமை மிக்கு மனைவி இரங்குதலும், தலைவன் திரும்பிய பின் அன்பினாற் பிணங்குதலும் ஆகிய ஐந்து பிரிவுக எாக இந்த அகத்தினை பேசப்பெறும். இந்த ஐந்து ஒழுகலாறு சினையும் முறையே குறிஞ்சி, பாலை, முல்லை, கெய்தல், மருதம் சின்று பெயரிட்டு வழங்குகின்றது தொல்காப்பியம். இவை சிறந்த முறையில் நடைபெறுவதற்கு முறையே மலையும் மலை சார்ந்த இடமும், மணலும் மணல் சார்ந்த வறண்ட இடமும், காடும் காடு 2. அகத்திணை - நூற். H