பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முப்பொருள் பாகுபாடு 27 அந்த நான்கு பகுதிகளும் முல்லை. குறிஞ்சி, மருதம், நெய்தல் என்ற முறையில் கூறப்பெற்றுள்ளன. நானிலம்’ என்று கூறும் மரபும் இவ்விடத்தில் கருதற்பாலது. மாரி பொய்க்கும் போது வளங்குன்றி முல்லை கிலமும் குறிஞ்சி நிலமும் விளைவின்றி வெறுங் தரைப்பரப்பாகக் காட்சியளிக்கும் போது அவற்றைப் பாலை என்று பெயரிட்டனர் என்பதை முன்னர்க் கண்டோம். தொல்காப்பியரும் கான்கு கிலத்தைப்பற்றியே கூறுகின்றார். மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன் மேய மைவரை உலகமும் வேந்தன் மேய தீம்புனல் உலகமும் வருணன் மேய பெரும்புனல் உலகமும் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல்எனச் சொல்லிய முறையால் சொல்லவும் படுமே ! (மாயோன் - திருமால் : சேயோன் - முருகன் ; வேக் தன் - இந்திரன்.) என்பது தொல்காப்பிய நூற்பா. தமிழ் நாட்டில் ஐந்தாவது சில மாகிய பாலை நிலம் இல்லாததால் அதைப்பற்றி ஆசிரியர் கூறி. வில்லை. கச்சினார்க்கினியர் கருத்து : நானிலத்தை முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்ற முறையில் தொல்காப்பியர் குறித்தற்கு ஆசிரியர் கச்சினார்க்கினியர் கூறும் காரணம் அமைதியுடையது என்று கருதலாம். ஐந்திணை ஒழுக்கமெல்லாம் இல்லறம்பற்றி நிகழ்வது. கணவன் சொற்படி கடந்து கற்பொடு பொருக்தி வீட்டி லிருந்துகொண்டு இல்லறமாகிய கல்லறத்தில் ஒழுகுவது மகளிரின் இயல்பாதலால் முல்லை முதலில் கூறப்பட்டது : முல்லை என்ற சொல்லுக்கே இருத்தல் என்பது பொருளாகவும் வந்துவிட்டது. குறிஞ்சி கில ஒழுக்கமாகிய புணர்தலின்றி இல்லறம் கிகழாது. என்பது யாவரும் அறிந்த செய்தி. எனவே, முல்லைக்குப் பின் குறிஞ்சியைக் கூறினார் ஆசிரியர். புணர்ச்சிக்குப் பின்னர் ஊடல் நிகழ்தல் இயற்கையாதலால் அவ்வொழுக்கத்திற்குரிய மருதத் திணையை அடுத்து வைத்தார். மருதம் என்ற சொல்லே ஊ டியும் கூடியும் போகம் நுகர்தலைக் குறிக்கும். மருதம் சான்ற மருதம் தண்பனை என்ற சிறுபாணாற்றுப்படையடிக்கு (அடி 185) நச்சினார்க்கினியர் இப்பொருளை வழங்கியுள்ளார். பரத்தையிற் 2. அகத்திணை - நூற்பா 5. 3. அகத்திணை - நூற்பா5 - இன் உரை.