பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/452

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை 423 உலக கிலையாமை, யாக்கை நிலையாமை, செல்வ நிலையாமை போன்ற அறவுரைகளையும் கண்டு தெளியலாம். இவ்விடத்தில் ஒர் உண்மையை காம் சிந்தித்தல் வேண்டும். காதலும் வீரமும் தமிழர்க்கு மட்டிலும் உரிய பொருள் என்று இக்காலத்தில் சிலர் கூறி வருகின்றனர். காதல் கிகழ்ச்சிகளும் வீர நிகழ்ச்சிகளும் எல்லா மொழிகளிலும் எல்லா நாட்டு இலக்கியங் களிலும் காணப்பெறும் செய்திகளே. ஆயினும், இந்த இரண்டு. உணர்ச்சிகளின் அடிப்படையில் தோன்றும கிகழ்ச்சிகட்குத் திணை, துறைகள் அமைத்து, இலக்கண வரம்புக்குள் அடக்கி, இலக்கிட, மரபுகளாகச் செய்த பெருமை தமிழ் மொழிக்கே சிறப்புடையதாகும். உலக வழக்கினை நாடக வழககாகச் செய்து கலையாக மிளிர வைத்த பெருமை தொல்காப்பியரைச் சார்ந்தது என்று கூறின், அது மிகையன்று. இங்ங்னமே செய்யுளியல், மரபியல் இவற்றில் கூறப்பெற்றுள்ளனவும் தமிழ் மொழிக்கே சிறப்பாக உடையவை. தமிழரது பண்பாட்டின் மேன்மையை அவர்களது அகவாழ்வும் புறவாழவும் கன்கு புலப்படுத்துகின்றன. இந்த இரண்டன் அடிப் படையில் இலக்கியங்கள் தோன்றின : இவற்றை விளக்குவதற்கு காளடைவில் பொருளதிகாரமாகிய இலக்கணமும் அமைக்கப் பெற்றது. சமூக வாழ்க்கை தொல்காப்பியத்திலிருந்து தொல்காப்பியர் காலத்தும் அவருக்கு முன்னரும் சமூக வாழ்க்கை எங்ங்னம் இருந்தது என்பதைச் சில குறிப்புகளால் அறிந்துகொள்ளலாம். அவற்றுள் ஒருசிலவற்றை ஈண்டுக் காண்போம். மக்கட் பிரிவு தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே தமிழ் காட்டில் மக்களிடையே பலவிதப் பிரிவுகள் ஏற்பட்டிருந்தன. அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற பிரிவுகள் இருந்தன. இவையாவும் அவர்கள் செய்யும் தொழிலினால் ஏற்பட்ட பிரிவுக ளாகும். இவர்களைத் தவிர பாணர், கூத்தர், பொருகi, பார்ப்பார், அடிமைவேலை செய்வோர், தேர்ச்சி பெற்ற தொழிலாளர்கள் போன்ற பல பிரிவுகளும் இருந்தன. அந்தணர் : அறிவு, ஆராய்ச்சி, நல்லொழுக்கம், தன்னல மற்ற தன்மை இவற்றையுடையவர்கள் யாவரும் அந்தணர் என்று வழங்கப்பெற்றனர். எல்லா உயிர்களிடத்தும் இரக்கங்காட்டி அறநெறியில் வாழ்வோர் அந்தனர். அரசர்களை அறநெறிப்படுத் தல், நாட்டு மக்கட்கு கல்லுரை வழங்கல், மக்கள் கல்வாழ்விற்காக