பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/453

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

430 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை இறைவனை வேண்டித் தவங்கிடத்தல் - இவை அந்தணரது கடமை களாகும். அந்தணர் வடிவத்தை, துலே கரகம் முக்கோல் மணையே ஆயுங் காலை அந்தணர்க் குரிய ே என்று தொல்காப்பியம் உணர்த்துகின்றது. முப்புரிநூல். தண்ணிர்க் கமண்டலம், முக்கோல், ஆசனம் ஆகியவை இவர்கட் குரியவை. இவர்கள் ஆட்சி செய்வதற்கும் உரியவர்கள். அந்தணாளர்க்கு அரசுவரை வின்றே. என்ற நூற்பா இதனை உணர்த்துகின்றது. அறிவும் பொதுநல ஆர்வமும் உடைய இல்லறம் நீத்த பெரியோர்களே அந்தணர் நிலை யில் பொதுகலம் புரிந்தனர். கிலமக்கள் எல்லாரிடமிருந்தும் அந்தணர் தோன்றுவர். இவர்கள் பிறப்பினால் தனி வகுப்பினர் அல்லர். அரசர் : தமிழகத்தில் ஆட்சிமுறை ஏற்பட்ட காலத்தி லிருந்து சேர சோழ பாண்டியர் ஆண்டனர். இவர்களே பழக். தமிழ்ப் பெருங்குடி மக்களின் மூத்த முதற்குடியினர். இவர் களை வண்புகழ் மூவர்' என்று செய்யுளியலில் குறிப்பர் தொல்காப்பியர். பெருகில மன்னருக்குட்பட்ட குறுகில மன்னரும். இருக்து வந்தனர். பேரரசரால் சிறப்புப் பெற்ற வணிகரும் வேளாளருமே சிற்றரசராவர். சங்ககாலச் சிற்றரசர்களில் பெரும். பாலோர் வேளாளர்களாகவே இருந்தனர். படை கொடி குடை முரசு குதிரை யானை தேர் தார் முடி போன்றவை அரசர்க்குச் சிறப்புடையனவாகும். இச்செய்தி. படையும் கொடியும் குடையும் முரசும் கடைகவில் புரவியும் களிறும் தேரும் தாரும் முடியும் கேர்வன பிறவும் தெரிவுகொள் செங்கோல் அரசர்க் குரிய.ே என்ற மரபியல் நூற்பாவால் அறியப்படும். தார் என்பது, போர்க் காலத்தில் அணியப்பெறும் பூவினையும் அடையாளப் பூவினையும், மரபியல் - நூற். 71. (இளம்.) டிை - நூற். 33 (இளம் ) செய்யு. நூற். 75. (இளம் ) மரபி. - நூற். 72 (இனம்.)