பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/455

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43.2 + தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை தொடர்புடைய தொழிலாதலின், வணிகர்களும் கிழக்கிழவர்களாக இருந்தமை பெறப்படுகின்றது. பெருவணிகர்கள் அரசரால் படை கண்ணி முதலிய சிறப்புப் பெற்றுச் சிற்றரசர்களாகத் திகழ்ந்தனர் என்பது, கண்ணியுக் தாரும் எண்ணினர் ஆண்டே." என்ற நூற்பாவால் அறியப்படும். வேளாளர் : இவர்கள் தொழுதுசண் சுவையினும் உழுதுண் இனிது’ என்ற கொள்கையைக் கடைப்பிடித்து உழவுத்தொழிலைக் கொண்டு வாழ்பவர்கள். வேளாண் மாக்தர்க்கு உழுதுரண் அல்லது இல்லென மொழிட பிறவகை நிகழ்ச்சி. என்ற நூற்பா இதனை உணரத்துகின்றது. பல்வகைத் தொழி லாளர்களும் வேளாளரேயாவர். தலைமை பற்றி உழவொன்றே கூறப்பட்டது. வேளாண் மாந்தர் பலவகைப்பட்ட தொழிலரேனும் உழுந்தொழிலே பெரும்பான்மையாதலின், அதனையே சிறப்பித்துச் சொல்லுதல் மரபு” என்ற பேராசிரியரின் உரையைக் கண்டு தெளிக. சில சமயம் இவர்கள் அரசர்களால் படைக்கலம் பெற்று, மாலை பூண்டு போர் வீரர்களாகத் தொண்டாற்றவும் உரிமை பெற். றிருந்தனர். வேந்துவிடு தொழிலிற் படையும் கண்ணியும் வாய்ந்தனர் என்ப அவர்பெறும் பொருளே.48 என்ற நூற்பாவால் இதனை அறியலாகும். இத்தகைய கான்கு வகைப் பிரிவுகள் தொல்காப்பியர் கர்லத் தில் பிறப்பினால் ஏற்பட்டவை அல்ல. தொழில், ஒழுக்கம், கல்வி யறிவு, திறமை காரணமாகவே இப்பிரிவுகள் அமைந்தன என்பது அறியத்தக்கது. சாதி என்ற சொல் தொல்காப்பியத்தில் காணப் பெறினும் அஃது ஒரிடத்திலேனும் மக்களைக் குறிக்கும் சொல்லாக வழங்கப்பெறவில்லை.

  • நீர்வாழ் சாதியுள் அறுபிறப்பு உரிய'

11. மரபி. - நூற் 80 (இளம்.) 12. .ை - நூற் 81 (இளம. ; 13. .ை நூற் 82 (இளம்.) 14. கை. - நூற் 44 (இளம்)