பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை பிரிவு போலப் பிரிவு ஒப்புமை நோக்கி நெய்தலை இறுதியில் வைத்துள்ளார். கெய்தற்பறை இரங்கற்பறையாதலின் நெய்தல் இரக்கத்தைக் குறிக்கின்றது. காலப் பாகுபாடு : முதற்பொருளில் இரண்டாவது பகுதி காலம். காலத்தைக் கூறும்போது பெரும்பொழுதை ஆறாகவும் சிறுபொழுதை ஆறாகவும் பிரித்துக் கூறுவர் ஆசிரியர் என்பதை முன்னர்க் கண்டோம். சிறு பொழுதைக் குறித்துக் கருத்து வேறு பாடும் உண்டு. கச்சினார்க்கினியர், இளம்பூரணர் ஆகியோர் காலை, யாமம், வைகறை, விடியல், நண்பகல், எற்பாடு என்று ஆறாகக் கொண்டுள்ளனர். அவர்கள் கருத்துப்படி ஒவ்வொரு பகுதியும் பப்பத்து நாழிகை கொண்டவை. ஆசிரியர் சிவஞான யோகிகள் வைகுறு விடியல் என்பது ஒரு பொழுது எனவும், எற்பாடு என்பது விடிந்த பின்னுள்ள காலைப்பொழுதைக் குறிக்கும் எனவும் கொண்டுள்ளார். இதுபற்றி அவர் கூறும் தடை விடைகளை அவருடைய முதற்குத்திர விருத்தி என்னும் நூலில் விரிவாகக் காணலாம். இவர்கள் யாவரும் சொற்களின் அடிப்படை யில் வாதத்தைத் தொடங்கி மலைகின்றனர் என்றே கொள்ள வேண்டும். அளவு கருவிக்கு எட்டாத காலம் : காலம் என்பது கற் பனைக்கு எட்டாத ஒரு பொருள். காலத்தைச் சரியாகக் கணக்கிட முடியாதென்பதைப் பண்டையாசிரியரும் கூறியுள்ளனர். காலம் பற்றி அறிவியல் பெரிபார் ஐன்ஸ்டைன் கொண்ட கருத்து இன்றைய அறிவியலறிஞர்களின் மனத்தையே கலக்கியுள்ளது. எனைய பொருள்களை நேரடியாக அளப்பதைப் போலக் காலம் என்பதை நேரடியாக அளக்க முடியாது. காரணம், அஃது அருவப் பொருள் ; ஏனையவை உருவப் பொருள்கள். உருவமற்ற சில பொருள்களும் பொறியுணர்வால் உணரக்கூடியவை. திருவள்ளுவர்,

  • காள்என ஒன்றுபோல் காட்டி உயிர் ஈரும்

வாள துணர்வார்ப் பேறின்' என்று காளின் தன்மையைக் கூறியுள்ளார். அவர் கருத்துப்படி காள் என்பது காலத்தின் ஒரு கூறு அன்று ; அது காலத்தின் ஒரு கூறு போலத் தோன்றுவது ; அவ்வளவுதான். கதிரவன், பூமி ஆகியவற்றின் இயக்கத்தால் கணக்கிடப்படுவது நாள். அறிவிய லறிஞர்களின் கருத்துப்படி நாள் என்பது பூமி தன்னைத்தானே ஒரு முறை சுற்றிக்கொள்ள எடுத்துக்கொள்ளும் காலம். இவ்வாறு சி. குறள் - 334.