பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/463

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

要垒G - தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை என்று அவர்கள் கூறுவர். தொல்காப்பியரும் அவிசோடெர்த்த: தமிழறிஞர்களும் மலக்கேயும் கிலைக்கு ஏற்பச் சிற்றுயிர்கள் முறையே அழிவிலும் பிறவியிலும் மேலேறி வருவதாகக் கருதுவர், புல்லாகிப் பூடாப்ப் புழுவாப் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாப் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்.8% என்று மணிவாசகப்பெருமானும் கூறுதல் ஈண்டு எண்ணற்பாலது. எனவே, மலக்தேயும் அளவிற்கேற்ப உயிர்கள் மேன்மேற் பிறவியிற். சேருமென்பதும், அதனால் ஒருயிர்க்குப் பல பிறவிகள் உளவாம் என்பதும், பிறவிகள் தோறும் ஈட்டப்பெறும் வினைகளே மேன்மேற். பிறவிகளை எடுத்தற்கேதுவாம் என்பதும் தொல்காப்பியருக்கு உடன்பாடாதில் பெறப்படும். கடவுள் உண்மை : மேற்குறிப்பிட்ட சிற்றுயிர்கள் போலாது. இயல்பாகவே பாசங்களினின்று நீங்கி விளங்கப்பெறும் பேரறிவுடை யவன் இதைவன். அவன் உயிர்களின் வினைக்கு ஏதுவாகிய மலத்தாற் பற்றப்படாதவன் ; எனவே பிறப்பிறப்பில்லாதவன். இதனை ஆசிரியர் தொல்காப்பியனார், வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதல்நூ லாகும்.* என்ற நூற்பாவால் பெறவைப்பர் மேலே தெய்வத்தினை கில வகையால் மாபோன், சேயோன் வேந்தன், வருணன் என வகுத்துக் கூறியவர் ஈண்டு நிலப்பாகுபாடி எல்லா கிலத்திற்கும் உரிய கிலையில் எங்கும் நீக்கமற நிறைந்த முழு முதற்பொருளைக் ‘கடவுள் என்ற பொதுப் பெயரால் சிறப்பித்துப் போற்றியுள்ளார். இங்குக் காட்டிய நூறபாவில் தூய மெய்யுணர்வே இறைவனது. திருமேனி என்பதும், அவன் ஒருவனே என்பதும் ஆசிரியர் காட்டி புள்ளமை கருத்ததக்கது. இங்ஙனமே, ஆசிரியர் திருவள்ளுவரும் இறைவனை வாலறிவன் (து ய அறிவினன்) என்று விளங்க உதைத்தமை ஈண்டு ஒப்புகோக்கி உணரத்தக்கது.”* கடவுள்


—- -

32. திருவாசகம் - சிவபுராணம் (அடி 26 - 31) 33. மரபியல் - நூற். 96. (இளம்.) 34. குறள் - 2,