பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/464

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் காட்டும் வாழ்ககை -woxoo. "..... too-ooro...” என்னும் சொல் இன்ன நிறம் இன்ன உரு என்று அறிய வெண்ணாத நிலையில் எல்லாத் தத்துவங்களையும் கடந்து சிற்கும் முழு முதற்பொருளைக் குறித்து வழங்கும் ஒரு காரணப் பெயராகும். கடவுள் - கடந்து நிற்றல் : அஃதாவது போதுத் தன்மையைக் கடந்து சிற்றல். எல்லாப் பொருள்களையும் உள் கின்று இயக்குபவன் இறைவனாதலின் இயவுள்' என்ற பெயரும் அவனுக்குப் பெயராக அமைந்தது. எல்லாத் தத்துவங்களையும் கடந்து காணவும் கருதவும் முடியாத முழுமுதற் கடவுளைக் காணவும் கருதவும் எளிதாகும்படி உருவம் கொடுத்து வழிபடலாயினர் பண்டைத் தமிழ் மக்கள். இதனை, - கொடிசிலை கன்தழி வள்ளி என்ற வடுங்ேகு சிறப்பின் முதலன மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே. என்ற நூற்பாவால் அறியலாம். இதற்கு உரையாசிரியர்கள் கூறும் பொருள்கள் ஒருபுறமிருக்க, இக்காலத் தமிழறிஞர்கள் தத்தம் அறிவின் திறத்தால் பலவாறு விளக்கிக் காட்டுவர். கொடிகிலை என்பது ஒாயிது என்றும், கந்தழி என்பது தீ என்றும், வள்ளி என்பது திங்கள் என்றும் பொருளுரைத்து, இது முத்தி வழிபாட்டினைக் குறிக்கும் என்றும், இன்னும் பல வாறாகவும் விளங்க உசைப்பர் மறைமலையடிகள். கச்சினார்க் கினியர் கூறியுள்ள முறையினையொட்டிக் கொடிநிலை என்பது: கீழ்த்திசையின்கண்ணே நிலைபெறுதலையுடைய மேகத்தை புணர்த்தும் என்றும், கந்தழி என்பது பற்றிழிந்தாராகிய கீத்தார் தன்மையைக் குறிக்கும் என்றும், வள்ளி என்பது வண்மைபற்றி நிகழும் அறத்தைக் குதிக்குல் என்றும், கடவுள் வாழ்த்தொடு பொருக்திவரும் இம்மூன்றும் திருக்குறளில் கடவுள் வாழ்த்தை யடுத்து வான் சிறப்பு, த்ேதார் பெருமை, அறன் வலியுறுத்தல் என வரும் மூன்றதிக சங்களில் முறையே கூறப் பெற்றுள்ளன என்றும் கூறுவர் பேராசிரியர் மு. இராகவய்யங்கார் அவர்கள். இவ்விளக்கங் கள் யாவும் அந்த அறிஞர்களின் புலமையைக் காட்டுவனவேயன்றித் தொல்காப்பியனார் கருதிய பொருளை விளக்குவனவாகத் தோன்றவில்லை. - 35. புறத்திணை - நூற். 37 (இளம்.) 36. மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் . பக். 656-662 : 696-399, - 37. தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி.பக். 120-123