பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/467

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

444 w தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை கம்மைச் சூழ உள்ளார் செய்யும் கொடுமைகளினாலும் பெரிதும் துன்புறுகின்தோம். இக்கிலையில் காம் இளமைப் பருவம் எய்தும் வரையில் ஆண்டவனால் நமக்கெனப் படைக்கப்பெற்றுள்ள பொருள்களை ஜம்புல்வாயிலாக நுகர்ந்து இன்புறுகின்றோம். ஆண் இளமைப் பருவமும் பெண் மங்கைப் பருவமும் எய்தியவுடன் இருவரிடையேயும் அதுகாறும் காணக் கிடையா வேறொரு புதுத் தேயத்தைக் கண்டாலொப்பப் புதியதோர் இன்ப உணர்ச்சி தோன்றுகின்றது. இவ்வின் பத்தைப் பெறுதலில் இருவரும் பெரு வேட்கையும் பெருமுயற்சியும் கொள்கின்றனர். இதுகாறும் துகர்க் து வந்த ஐம்புல இன்பங்களெல்லாம் இப்புதிய இன்பத்தின் முன் கில்லாவாப், ஐம்புல இன்பங்களில் தாழ்ந்தவாய், இப்புதிய இன்பத்தைப் பெறாத வழி அதனால் ஏக்கமுறுவார்க்குத் துன்பக் தரும் பெற்றியவாய் மாறிவிடுவதைக் காண்கின்றோம். ஆடவனும் மகளும் தானே, அவளே என்ற வேற்றுமையின்றி, ஒருவர் பாலொருவர் அன்பு மீதுரரப்பெற்று, இருவரது தன் கலன்களும் மறைந்து, இன்பம் நுகர்கின்றனர். இத்தகைய காதலின்பம் உடம்புக்கு உயிர் போல்வதாயும், இருள் சூழ்ந்த இரவில் அவ்விரு ளகற்றும் முழுமதி போல்வதாயும், ஒரறிவு உயிர்கள் முதல் ஆறறிவு உயிர்கள் வரை அறிவும் முயற்சியும் பெறச் சுடரொளி பரப்பும் ஞாயிறு போல்வதாயும் பல்வேறு திய உணர்ச்சிகளாலும் அறியா மையாலும் வேறுபட்டுள்ள மக்களையும் ஒருவரோடொருவர் அளவ. ளாவப் புகுத்தும் இறைவன்றன் அருள் விளக்கம் போல்வதாயும் இருப்பதை நாம் ஆராய்ந்து உணரமுடிகின்றது. இதனால்தான் ஆசிரியர் தொல்காப்பியனார், இன்பமும் பொருளும் அறனும்’ என நுகர்தல் வேட்கை முறைபற்றி இன்பத்தை முதலில் வைத்து ஒதுவாராயினர் என்பது தெளிவாகின்றது. தொல்காப்பியருக்குட பின்னர் எழுந்த நூல்கள் அறம் பொருள் இன்பம் என்ற செய்கை முறையில் அமைந்தன. இங்ங்னம் அமைவதற்குப் பெளத்த சமண சமயக் கொள்கைகளின் செல்வாக்கே காரணம் எனக் கருதலாம். இதனால்தான் திருவள்ளுவர் தமது காலப் போக்கினையொட்டி அறத்தை முதற்கண்ணும் இன்பத்தை இறுதிக்கண்ணும் வைத்து நூலியற்றினார். ஆயினும், அவர் இன்பத்தை வாயிலாகக் கொண்டாலன்றி அறனும் பொருளும் செவ்வனே நடைபெறா என்பதை நன்குணர்ந்தவராதலின் அறத்தை இல்லறம், துறவறம் என இரண்டாகப் பகுத்துக் காதலின் பத்தின் வழிப்படுவதாகிய இல்லறத்தை முதற்கண நிறுத்தி நூல் அருளினர் என்பது உய்த்து உணர்த்திக்கது. . பொருளியல்பு : கல்விப் பொருள், செல்வப் பொருள் எனப் பொருள் இருவகைப்படும். இம்மையில் நிகழும் இன்ப வாழ்வு