பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/471

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.48 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை என்பது இதன் பொருள். மிக்க காமத்து வேட்கை நீங்கிய கணவ னும் மனைவியும் வீடுபேற்றினை விரும்பிப் பற்றற வாழும் துறவு கிலையை ஆசிரியர் அருளொடு புணர்ந்த அகற்சி என்று குறிப் பிடுவர். இதனை இளம்பூரணர், அருளுடைமை, கொல்லாமை, பொய்யாமை, கள்ளாமை, புணர்ச்சி விழையாமை, கள்ளுண் னாமை, துறவு என்பனவற்றைப் பொருங்துதலாம். அவற்றுள் அருளுடைமையெரழிந்த எல்லாம் விடுதலால் அகற்சி என்றார்’ என்று விளக்குவர். இத்தகைய அருள் வாழ்வினை விரும்பி வேந்தர்களும் தங்கள் அரச பதவியினைத் துறத்தல் உண்டு. அங்ங்னம் துறக்கும் இயல்பினைக் கட்டில் கீத்தபால் என வழங்குவர் ஆசிரியர். இத்தகைய பல வரலாற்றுக் கூறுகள் அடங்கிய சேய்திகளை புறத்தினை இயலில் காணலாம். - பழக்கவழக்கங்கள் பண்டைத் தமிழர்களின் பழக்கவழக்கங்களைப்பற்றிய ஒருசில குறிப்புகள் தொல்காப்பியத்தில் புலனாகின்றன. ஒருசிலவற்றை ஈண்டுக் காண்போம். - - திருமணச் சடங்கு தொல்காப்பியர் காலத்திற்கு முன்பு பண்டைத் தமிழ் மக்களில் ஆடவரும் பெண்டிரும் ஒருவரை யொருவர் எதிர்ப்பட்டுத் தம் காட்சியும் கருத்தும் ஒன்றுபட்டுத் தமக்குள் ஒருவரையொருவர் உயிர் போல் காதலிக்கும் காதலன்பு நிகழப்பெற்றபின் தமக்குள் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்தனர். இஃது அன்பினைக்திணைக் காமக் கூட்டம்’ என வழங்கப்பெற்றது. அதன் பின்னர் அவர் தம் பெற்றோரும் சுற்றத் தாரும் மனங்கட்டுவர். கத்பெனப் படுவது கரணமொடு புணரக் கொளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைக் கொடைக்குரி மரபினோர்க் கொடுப்பக்கொள் வதுவே.* என்ற நூற்பாவால் அறியலாகும். மகளிர்க்குரியார் தம் மகளிரால் விரும்பப்பட்ட காதலர்க்குத் தம் மகளிரை மணம் செய்து கொடுக்க ஒருப்படாவழிக் காதலர் இருவரும் தம் பெற்றோர் உற்றார் அறியா மல் வேற்றிடஞ் சென்று மணஞ் செய்துகொள்வர். இது 51. புறத்திணை-நூற். 17. 52. டிை - நூற். 1?. 53. கற்பியல் - நூற் 1.