பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/472

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை 学委夺 கொடுப்போர் இன்றியும் காrைம் உண்டே புணர்ந்துடன் போகிய காலை யான. * என்ற நூற்பாவல் அறியப்படும். ஒருப்பட்டவழிப் பெற்றோரே சடங்கு மூலம் மணம் கடத்திவைப்பர். இச்சடங்கு முறை அகம். 86.இல் சொல்லப்பட்டவாறு நிகழும். காதலர்களிடையே வஞ்சித் தொழுகுதலும் பொய்யும் தலைகாட்டின காலத்தில்தான் பண்டைத் தமிழ்ச் சான்றோர் திருமணச் சடங்கை வகுத்தனர். இது, பொய்யும் வழுவுக் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப.”* என்ற நூற்பாவால் அறியப்படும். ஒருசிலர் ஐயர் என்பது ஆரியர் என்ற சொல்லின் திரிபு எனப் பிறழவுணர்ந்து, ஆரியர் வந்த பிறகு தமிழ்த் திருமண முறை சீர்ப்பட்டது என்று கூறினர். அது தவறு. ஐயர் என்ற சொல் ஐ’ என்பதன் அடியாகப் பிறந்த தாகும். ஐ வியப்பாகும் என்பது தொல்காப்பியம். வியக்கத் தக்க குணமும் செயலும் உடைய முனிவரையே குறிக்கும் இச் சொல் நாளடைவில் ஒரு குடும்பத்திற்குத் தலைவராய்க்-குலப் பெரியோராய்க் -குணத்தினிலும் செயலிலும் சிறந்தாரை உணர்த்வி வதற்கு வழங்கலாயிற்று என்பது அறியத்தக்கது. ஐபர் என்பது சாதிப் பெயர் அன்று. தெலுங்கு காட்டில் எக்குலத்தினராயினும் பள்ளியாசிரியரை அய்யவாரு என்று குறிப்பிடும் வழக்கம் இன்றும் உள்ளமை இதனை உறுதிப்படுத்தும். நம்பிக்கைகள் : தொல்காப்பிய காலத் தமிழர்கள் மந்திரத்தில் கம்பிக்கை கொண்டிருந்தனர். இன்றும் மக்கள் மந்திரச் சொற் களின் பொருளை அறியார். அக்காலத்தில் பெரியோர்களால் சொல்லப்பட்ட பொருள் தெரியாத சொற்களை மந்திரங்கள் என்று மக்கள் நம்பினர். நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளங்த மறைமொழி தானே மந்திரம் என்ப.57 என்ற நூற்பாவால் இச்செய்தி அறியப்பெறும். எக்காரியங்களுக்கும் நல்ல நாள், கெட்டநாள் பார்க்கும் வழக்கம் தமிழர்களிடமிருந்தது. 54. கற்பி. - நூற். 2. 55. 2ை - நூற். 4. 56. தொல் - சொல் - உரியி - நூற். 87, 57. செய்யு. - நூற். 171 {இளம்.) ைதால்,-29