பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/475

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

452 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை இருந்தது. மனையின்கண் இருந்து மனையறம் கிகழ்த்தும் உரிமை புடையவள் மனைவி. மனை வாழ்க்கைக்குப் பொலிவினைத் தரும் மனைவியை, மனைக்கு விளக்காகிய வாணுதல்’ே என்று புறநானூற்றுப் புலவர் பாராட்டுவர். இத்தகைய குடும்ப விளக்கு - இல்லினை ஆள்பவள் - இல்லான்’ எனப்பட்டாள், கற்பொழுக்கத்தில் வாழும் பெண்ணின் பொறுப்பினை, கற்பும் காமமும் கற்பால் ஒழுக்கமும் மெல்லியல் பொறையும் திறையும் வல்லிதின் விருந்துபுறக் தருதலும் சுற்றம் ஒம்பலும் பிறவும் அன்ன கிழவோன் மாண்புகள்.87 என்று தொல்காப்பியம் குறிப்பிடும். இங்கு விருந்து என்பது முன்பின் அறியாத புதியவர்கள் என்பதும், சுற்றம் என்பது தன்னைச் சூழ்ந்திருப்பவர்கள் என்பதும் அறியத்தக்கவை. இல்லறம் இனிது நடைபெறுவதற்கு வேண்டிய செல்வத்தைச் சேர்ப்பது கணவனின் பொறுப்பாக இருந்தது. கணவனை இழக் தோர் பருத்திப்பஞ்சினை நூலாக நூற்றுத் தம் குடும்பத்தைப் பாதுகாத்தனர். இவர்கள் தம் குடும்ப வருவாய்க்குரிய தொழிலாக நூல் நூற்றலை மேற்கொண்டமையால் பருத்திப் பெண்டிச்' என்ற பெயரால் தமிழிலக்கியங்களில் குறிக்கப்பெற்றனர். குணம் அமைதல் : பெற்றோர்கள் குணம் பிள்ளை கட்கு அமையும் என்பது பழந்தமிழர்களின் கொள்கையாக இருந்தது. இது, தங்தையர் ஒப்பர் மக்கள் என் பதனால் அந்தமில் சிறப்பின் மகப்பழித்து நெருங்கினும்,89 என்ற கற்பியல் நூற்பாப் பகுதியால் அறியப்பெறும். பெற்றோர் களின் குணம் பிள்ளைகட்கு அமைவது குடிவழியின்டாற் பட்டதா (Heredity), syairgi.5 gig 55069.9667i jir 5LL-3r (Environment) என்பது ஆராய்ச்சிக்குரியது. பழிக்கவழக்கங்களும், சுற்றுச் சார்பும், சூழ் கிலையுமே ஒருவருடைய ஒழுக்கத்திற்கும் குணத் 66. புறம். - 314. 67. கற்பி. - நூற். 11. 68. புறம். . 25, 326. 69. கற்பி. - நூற். 6.