பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/476

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை 453 திற்கும் காரணம் என்று உளவியலார் கூறுவர். ஆயினும், பிள்ளைகளின் உடலியற்பண்புகள் தாய், தந்தை, பாட்டன், பாட்டி முதலியவர்களையொட்டி அமைந்திருக்கும். இதுபற்றிய முழு விவரங்களை இந்நூலாசிரியர் எழுதியுள்ள வாழையடி வாழை' என்ற நூலில் கண்டு தெளிக. - உயர்வு தாழ்வு : பொருளல்லவரைப் பொருளாகச் செய்யும்’ கிலை பண்டைத் தமிழர்களிடையேயும் காணப்பட்டது. செல்வம் உடையவர்கள் உயர்ந்தவர்களாகவும் வறியவர்கள் தாழ்ந்தவர் களாகவும் கருதப்பெற்றனர். இஃது, "இன்மைய திளிவும் உடைமைய துயர்ச்சியும்.' என்ற நூற்பா அடியால் பெறப்படும், உள்ளவர் உயர்ந்தோர். இல்லாதவர் இழிந்தோ என்ற மனப்பான்மை பண்டிருக்தே தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் தவறான மனப்பான்மையாகும். ஆயினும், செல்வமுடையவர்கள் பிறருக்கு உதவி செய்யாதி தன்னலக்காரர்களாக இருப்பின் அவர்கள் மக்களால் பழிக்கப் பட்டனர். அறிஞர்களாலும் புலவர்களாலும் வெறுக்கப்பட்டனர். இந்த உண்மை, "கொடுப்போர் ஏத்திக் கொடாஆர்ப் பழித்தலும்’’’ என்ற அடியால் பெறப்படுகின்றது. இதனையே ஒளவையார் 'இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்' என்று கூறினார். மொழியைப் பேனல் இலக்கணம் அமையப்பெறாத மொழிகள் வரப்பிலா வயல் களையொக்கும். பழமையும் பண்பும் வாய்ந்த பசந்தமிழை. இலக்கண வரம்புடைய மொழி என்று அறிஞர்கள் பாராட்டிப் பேசுவர். ஒரு மொழியின் பண்புகளை அதன் இலக்கணம் நன்கு பாதுகாக்கும் என்ற உண்மைக்குத் தமிழ் இலக்கணமாகிய தொல்காப்பியம் தக்க சான்றாகும். ベ - பிறமொழிச் சொற்கள் : தொன்று தொட்டுப் பல இனத்தார் தமிழர்களுடன் வந்து கலந்துள்ளனர். அவ்வினத்தாருடன் போக்தி 70. வாழையடி வாழை. (மணிவாசகர் நூலகம், சிதம்பரம் - 608001) 71. அகத்திணை - நூற். 44. 72. புறத்திணை நூற். 29. 73. கல்வழி-2