பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/478

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை ఛ్ ஆனால், அவ்விதம் கலக்குங்கால் ஒரு வரம்புடன் வருதல் வேண்டும் என்பதே அவர்கள் நோக்கம். இலக்கிய வளர்ச்சி தமிழில் பலவகை இலக்கியங்களும் பெருக வேண்டும் என்பது தோல்காப்பியரின் கருத்து, மொழி பெயர்ப்பு நூல்களும் புது நூல்களும் தமிழில் வந்து குவிய வேண்டும் என்பது பண்டைத் தமிழரின் நோக்கம். சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்.18 என்று பாரதியாரைப்பாடும்படி செய்தது இந்தப் பரக்த நோக்கமே. மொழிபெயர்ப்பு நூல்களை வழிநூல் வகையில் ஒன்றாகத் தொல்காப்பியரே கூறியுள்ளார். மொழிபெயர்த்து அதர்ப்பட பாத்தல் என்பது அவரது திருவாக்கு.? இதனால் சிறக்த துரல் கள் எம்மொழியில் இருப்பினும் அவற்றை மொழி பெயர்த்துக் கொள்ளும் உயர்ந்த வழக்கம் தமிழர்களிடம் இருந்து வக்திது என்பது உணரத்தக்கது. இக்தப் பண்பாட்டின் அடிப்படையில்தான் பாரதியாரும், X பிறகாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும் : இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும். என்று கமக்கு ஆணை தருவர். உலகப் போக்கைக் கவனித்து அதற்கேற்ப நம் வீட்டுச் செல்வத்தைப் பெருக்குதல் கம்மனோர் கடனாகும். தமிழ்மீதுள்ள காதலினால் தமிழில் எல்லாம் உள்ளன என்று வாய்ப்பத்தல் போட்டுக்கொண்டிராது ஒல்லும் வகையெல்லாம் தமிழின் கீர்மை குன்றாது தமிழை வளர்ப்பது இன்றைய இளைஞர்களின் கடமையாகும். இதுவே தொல்காப்பியர் கருத்துப்படி மொழியைப் பேணுவதாகும். போர் முறைகள் தமிழர்களின் போர் முறைகளைத் தொல்காப்பியப் புறத் திணையியலால் விரிவாக அறியலாம். பெரும்பாலும் தற்காப்பு முறையில்தான் போர் கடைபெற்றது. 76. பா.க. தமிழ்த்தாய் . 11 77. மரபியல் - நூற். 94 (இளம்.) 78. பாரதியார் கவிதைகள் - தமிழ் - 3