பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/480

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை 457° கூத்தர் : கூத்தர் என்பவர் ஒரு பிரிவினர். கூத்தில் வல்லவர்கள் கூத்தர்கள். பல கோயில்களில் திருவிழாக் காலத்தில் இவர்கள் கூத்தாடுவர். பல கோயில்கள் இவர்கட்குக் காணியாட்சி யாக இருந்து வந்தன. இன்றும் கூத்தாடி" என்ற ஒரு வகுப்பினர் தமிழ் நாட்டில் இருந்துவருவது ஈண்டு நினைவுகூரத்தக்கது. பாணர் பானர் என்பார் மற்றொரு பிரிவினர். பாண் என்பது, யாழ். பண்ணிலிருந்து பாண் பிறந்தது. பண் என்பது இசையைக் குறிக்கும். பண்ணாகிய இசையைத் தரும் கருவியைப் பாண் என்று வழங்கியிருக்கலாம் என ஊகிக்க இடம் உண்டு. பாண் வாசிப்பதையே தொழிலாகக் கொண்ட பாணர்கள் யாழின் மூலம் இசை விருந்தளிப்பதில் மிக்கத் திறமையுடையவர்கள். இவர்களில் பெண்கள் பாடினி என்று வழங்கப்பெறுவர். இவர்கள் வாய்ப்பாட்டில் வல்லவர்கள். பொருநர் : இன்னொரு பிரிவினர் பொருநர் என்போர். இவர்களுள் போர்க்களம் பாடுவோர், ஏர்க்களம் பாடுவோர், பரணி பாடுவோர் எனப் பலவகையினர் உளர் என்று கூறுவர் கச்சினார்க்கினியர். பிறரை ஏற்றிப் புகழ்ந்து சிறப்பித்துப் பாடி வாழ்க்கை கடத்துவோர் பொருநர் ஆவர். இவர்களைச் சேர்க்த பெண்கள் விறலியர்' என்று வழங்கப்பெற்றனர். விறல்-வெற்றி, திறமை. இப்பெண்கள் இசை, நடனம் முதலியவற்றில் திறமை யுடையவராதலின் விறலியர்' என்று வழங்கப்பெற்றனர். போலும் : கூத்தரும் பாணரும் பொருகரும் விறலியும் ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப் பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச் சென்றுபயன் எதிர்ச் சொன்ன பக்கமும்.82 என்ற நூற்பாப் பகுதியால் மேற்கூறிய கூத்தர், பாணர், பொருநர், விறலி என்ற பெயர்களையுடைய வகுப்பார் இசைக் கலை, நாடகக் கலை முதலியவற்றைத் தொழிலாகக் கொண்டு வாழ்ந்து வந்தவர்கள் என்று அறிகின்றோம். சிற்பக்கலை : பண்டைத் தமிழர்கள் சிற்பக் கலையிலும் சிறப்புற்றுத் திகழ்ந்தனர் என்பதற்கு ஒருசில குறிப்புகள் கிடைக்கின்றன. 82. புறத்திணை-நூற். 30 (இளம்.)