பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/482

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை 会。59 என்றும் கூறுதலால் இக்த இலக்கணம் வாழ்க்கையோடு பொருத்திஉே உண்டாயிற்று என்று அறிகின்றோம். பிற மொழி களிலெல்லாம் வாழ்க்கையிலிருந்து இலக்கியங்கள் மலர்ந்தாலும் அந்த இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்டு இலக்கணம் ஒன்றும் தோன்றாதிருக்க, கந்தமிழ் மொழியில் இந்த இலக்கியங் கள் பன்னுாறு யாண்டுகட்கு முன்னரே தோன்றினதால்தான் அவற்றை அடிப்படையாகக் கொண்டு வாழ்க்கை இலக்கணம்’ தோன்றுவதற்கு அவை ஏதுவாக அமைந்தன. இத்தகைய வாழ்க்கைப் பெருநூல் தமிழகத்தில் பல்லாயிரம் பாண்டுகட்கு முன்னரே தோன்றி வேரூன்றி சிற்பதாயின், அது தமிழர்களின் பழம் பெருமையையும் நாகரிக மேம்பாட்டையும் தெள்ளத் தெளிய விளக்கும் தொலைநோக்கி போல-காலக்-கண்ணாடியாகத் திகழ்கின்றது என்று அறிகின்றோம்.