பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை கூடும்; சில வராமல் இருத்தலும் கூடும். உரிப்பொருள் மட்டும் கட்டாயம் வருதல் வேண்டும். இலக்கிய மரபுகள் : மேற்கூறிய நிலையை ஒருவாறு விளக்கு வோம். குறிஞ்சியாகிய நிலத்தில் குறிஞ்சித்திணையின் உரிப்பொரு ளாகிய புணர்ச்சி நிகழ்வதாகச் சொல்லுவது இலக்கிய மரபு; இப்படியே ஒவ்வொரு நிலத்திற்கும் உரிய ஒழுக்கங்களை இணைத்துக் கவிதைகளை இயற்றுவர் கவிஞர்கள். உலக வழக்கில் மலைகாட்டில் மட்டும் காதலர்கள் ஒன்றுபடுவர் என்ற வரையறையைப் பார்க்கமுடியாது. வேறு இடங்களில் இவர்கள் சந்தித்து ஒன்றுபடுவதும் உண்டு. இதையொட்டி இலக்கிய ஆசிரியர்கள் பிற கிலங்களிலும் பிற ஒழுக்கங்கள் நிகழ்ந்ததாகச் சிறுபான்மை கவிதை புனைவர். இஃது உலகியல் வழக்கு அஃதா வது உலகத்தார் ஒழுகலாற்றோடு ஒத்து வருவது. இலக்கியத்தின் சுவையை மிகுதிப்படுத்த இலக்கிய ஆசிரியர்கள் தம் கற்பனையால் பல உத்திமுறைகளைக் கையாளு வது வழக்கம். அந்த முறையில் புணர்தல் என்ற நிகழ்ச்சிக்கு இயற்கை வளமும் தனிமையும் மிக்க மலைநிலம் ஏற்றது; தனிமை குளிர்காலத்தில் நடுயாமத்தில் இயல்பாக அமைவது. எனவே, குறிஞ்சி நிலத்தில் குளிர்காலத்தில் நள்ளிரவில் குறிஞ்சிக் கருப் பொருள்களின் சூழ்நிலையில் குறிஞ்சி உரிப்பொருளாகிய புணர்ச்சி நடைபெறுவதாகச் சொன்னால் கட்டாயம் நாம் அதன் தனிச்சுவையை உணரலாம். அதுபோலவே, பாலை நிலத்தில் பிரிவு கிகழ்வதாகச் சொன்னால்தான் சுவை மிகுதியாகத் தோன்றும். கோடைக்காலத்தில், எங்கும் வெப்பம் பொறுக்கமுடியாத கண் பகலில், மரங்களெல்லாம் வேரோடும் வெம்பி கிழலற்றுக் காட்சி யளிக்கும் பாலை கிலத்தில், பருக நீரின்றி வாடும் பானையும் உணவின்றி உழிலும் புலியும் காணப்பெறும் சூழ்நிலையில், தலைவியைவிட்டுத் தலைவன் பிரிந்ததாகக் கவிதை புனைந்தால், அதில் அவலச் சுவை சிறப்பாக அமையும். நாடக வழக்கு : இவ்வாறு முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகிய மூன்றும் இணைந்து திறனுடன் ஆக்கப் பெற்ற பாடல்கள் சிறந்தவை. இவ்வாறு சுவைபட வருவன எல்லாம் ஓரிடத்து வந்தனவாகத் தொகுத்துக் கூறுவதை கோடக வழக்கு என்று தொல்காப்பியர் குறிப்பிடுவர். இவ்வாறு கூறு வதைக் கவிதைக்குரிய வேலி என்று நினைத்தல் தவறு. இந்த வரையறைகள் கவிதைகளின் கவினை மிகுதிப்படுத்திக் காட்டும் கூறுகளாகும்.