பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முப்பொருள் பாகுபாடு 27 கடவுள் கம்பிக்கை : இறைவன் ஒருவன் உண்டு என்ற உண்மை தமிழர்களின் அசைக்க முடியாத கம்பிக்கை. தானலாது உலகம் இல்லை, சகமலாது அடிமையில்லை' என்று அப்பர் பெருமான் கூறியதற்கேற்ப, தமிழர்கள் இறையின்றி உலகம் இல்லை என்று கம்பினர். இதனால்தான் தொல்காப்பியர் முதற் பொருளாகிய நிலத்தைக் கூறவந்த இடத்திலேயே தமிழர்கள் இன்றியமையாததாகக் கருதிய கருப்பொருளாகிய தெய்வ வழிபாட்டையும் குறிப்பிட்டனர். மேற்கூறிய மாயோன் மேய’ என்ற நூற்பாவால் இதனை அறியலாம். பின்னர்க் கருப் பொருளைக் கூறும்போதுகூடத் தெய்வத்தையே முதலாவதாகக் கூறியுள்ளமை எண்ணி உணர்தற்குரியது. 8. தேவாரம் அடங்கன் முறை-4552 9. இந்நூல் - பக்கம்-25.