பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. ஐந்திணை நெறி மூவகை இன்பம் : இன்பத்தை கல்கும் காமத்தை மூன்று. பிரிவாகப் பிரித்து இலக்கண ஆசிரியர்கள் வகைப்படுத்தி யுள்ளனர். ஆடவரிலோ மகளிரிலோ யாரேனும் ஒருவர் மாத்திரம் மற்றொருவர்மீது காதல் கொள்வதாகச் சொல்லுவது ஒரு வகை. வலிய இன்பம் நுகர்தல் மற்றொரு வகை. இந்த இரண்டு வகை களைக் குறித்துப் பின்னர்க் காண்போம். மூன்றாவது வகைதான் அன்புடைக் காமம் என்பது. இஃது எண்வகை மனங்களுள் காந்தருவம் என்ற மனத்தினை ஒப்பது ; கந்தருவர் என்பார் இசையில் வல்லதொரு தேவ சாதியார். கந்தருவ குமரரும் கன்னியரும் தம்முள் எதிர்ப்பட்டு மனமீயைக்து கூடுவது காந்தருவ மாகும். இங்ங்னமே தலைவனும் தலைவியும் யாதொரு உள்ளக் குறிப்பும் முயற்சியுமின்றி, ஈண்டுச் செய்த கல்வினைப் பயனால் கொடுப்பாரும் அடுப்பாருமின்றி, ஒரு பொழிலகத்து எதிர்ப்பட்டு மனமியைக்து கூடுவதுதான் அன்புடைக் காமம். காம நிகழ்ச்சி யின்கண் ஒத்த அன்பினராய்க் கூடுதல் கல்வினையான் அல்லது வாராது என்பது பண்டையோர் கொள்கை. தொல்காப்பியர் இதனை, ஒன்றி உயர்ந்த பாலது ஆணை' என்று குறிப்பிடுவர். காந்தருவ மனத்தினைக் களவியல் உரைகாரர் யாழோர் கூட்டம் என்று கூறுவர். குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்று ஐந்து திணையாகப் பிரித்துப் பேசப்படுவதால் இதனை ஐந்திணை கெறி என்று குறிப்பிடும் வழக்கமும் உண்டு. திணை என்ற சொல் ஒழுக்கத்தினைக் குறிக்கும். இந்த ஐந்து வகை ஒழுக்கங்களும் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்ற மூன்று வகையான பொருள் களையுடையன. இக்த மூன்று பொருள்களைக் குறித்து முன்னர்க் கண்டோம். இவற்றுள் உரிப்பொருள்தான் மிகவும் முக்கியமானது. 1. களவியல் - நூற்பா 2.