பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்திணை நேறி 29. என்றும், காதல் நாடகத்தின் இயக்கம் இதுதான் என்றும் கூறினோம். காதல் நிகழ்ச்சிகள் - துறைகள் : மேற்கூறிய ஐந்து திணை யிலும் கிகழும் கிகழ்ச்சிகளை முறையே புணர்ச்சி, பிரிவு, இருத்தல், ஊடல், இரங்கல் என்றும் குறிப்பிட்டனர் பண்டைய ஆசிரியர்கள். இப்படி ஐந்து பிரிவாகப் பிரித்தாலும், கதை போலத் தொடர்ந்து வரும் காதல் வாழ்க்கையில் பல கட்டங்கள் இருக்கும். ஒவ்வொரு கட்டத்திலும் பல சிறு நிகழ்ச்சிகள் நிகழக்கூடும். இவற்றைத் துறை: என்று கூறுவர் இலக்கண நூலார். அகப்பொருள் பற்றி வரும் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு துறையில் அமைந்திருக்கும். கிட்டத்தட்ட நானூறு துறைகள் அல்லது கிகழ்ச்சிகளை அகப் பொருள் நூல்களில காணலாம். அகநானூறு, கற்றிணை, குறுங் தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை போன்ற எட்டுத்தொகை நூல்களில் இத்தகைய துறைகளமைந்த பாடல்களைக் காணலாம். இந்தச் சங்க நூல்களில் இத்துறைகள் தொடர்ச்சியாக இருப்ப இல்லை : கலந்தே காணப்பெறும். இவற்றைக் கதை போலத் தொடர்புபடுத்தித் துறைகளைக் கோத்து, ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு செய்யுளாக அமைத்துப் புலவர்கள் நூல்களைச் செய் துள்ளனர். அந்த நூல்களைக் கோவை என்று வழங்குவர். அவற்றை அகப்பொருட் கோவை’ என்றும் குறிப்பிடும் வழக்கம் உண்டு. மணிவாசகப்பெருமான் அருளிய திருக்கோவையார்? இவ் வகையான நூல். ஒரே துறையில் அமைந்திருக்கும் பல பாடல்கள் அங்குக் காணப்பெறலாம் : அவற்றில் கூறப்பெறும் நிகழ்ச்சிகளும் ஒரே மாதிரியாகவும் அமைந்திருக்கக்கூடும். என்றாலும், ஒவ்வொரு பாடலும் தனிச்சுவையுடன், படிக்கப் படிக்க இன்பம் ஊறும் .தன மையுடன் இருப்பதை அறியலாம். பாடல்களின் சுவை இவ்வாறு இருப்பதற்குக் காரணம் என்ன ? ஒரே கருத்தைப் பலர் பல விதமாகச் சொல்லலாமல் லவா ? முதற்பொருள், கருப்பொருள் இவற்றின் வருணனையில் வேறுபாடுகள் இருக்கலாம் ; சொல்லுகின்ற முறையிலும் வேறு பாடு இருக்கலாம். கோதுமையும் சருக்கரையும் நெய்யும் கலந்து செய்வதும் அல்வாதான். அத்துடன் குங்குமப் பூ, ஏலக்காய் முதலிய வாசனைச் சரக்குகளையும் சேர்த்துச் செய்வதும் அல்வா தான். இரண்டும் அல்வாவாக இருந்தாலும் வெவ்வேறு சுவை யுடனுள்ளனவல்லவா ? இதில் செய்கின்றவர்களின் கைத்திறனும் சேர்ந்தால் அதன் சுவையே வேறுதான். அறுசுவை உண்டி’ என்று உணவு வகைகளை ஆறு சுவைக்குள் அடக்கித்தான் பேசுகின்றோம். ஆனால், நாம் நுகரும் பண்டங்களில் அந்த ஆறு சுவைகளும்