பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒருதலை வேட்கையும் ஒப்பில கூட்டமும் さ。ア ஆடவனை விரும்புதலும், முற்றிலும் அன்பில்லாத இருவர் ஒருவரையொருவர் விரும்புதலும் கைக்கிளையின்பாற்படும். இக் கைக்கிளையைச் சிறப்புடைய கைக்கிளை, சிறப்பில்லாத கைக்கிளை என இருவகையாகத் தொல்காப்பியர் கூறியுள்ளார். முதலில் சிறப்புடைய கைக்கிளை யாது என்பதைப் பார்ப்போம். காம உணர்ச்சி தோன்றாத இளைய பருவத்தளாய ஒருத்திபால் ஒருவன் காதலுறுதல் சிறந்த கைக்கிளை வகைகளுள் ஒன்றாகும் என்று தொல்காப்பியர் குறிப்பர். காமஞ் சாலா இளமை யோள்வயின் ஏமஞ் சாலா இடும்பை எய்தி நன்மையும் தீமையும் என் (று) இரு திறத்தான் தன்னொடும் அவளொடும் தருக்கிய புணர்த்துச் சொல்னதிர் பெறாஆன் சொல்லி இன்புறல் புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே. 1சாலா - அமையாத எமம் - மருந்து இடும்பை துன்பம்: புல்லி - பொருந்தி) என்பது அவர் கூறும் கைக்கிளை. காமக் குறிப்புச் சிறிதுமில்லாத ஒருத்திபால் காதல் கொள்ளுதல் நகைப்புக்கிடமான செய்கை. அதனால்தான் ஆசிரியர் இதனைச் சிறந்த கைக்கிளையாகப் பேசுவர். இவ்வாறு காமஞ்சாலாத மகள்மேற்கொள்ளும் காதலுக்கு மருந்தே இல்லை. எனவே, அவ்வாறு காதல் கொள்ளும் மகன் மருந்தினால் தீரமுடியாத துன்பத்தை அடைவான் என்றும் குறிப் பிடுவர். இத்துன்பம் காரணமாக அவளைக் குறை கூறுதலும் நகை விளைவிக்கும் செயலாகும். தன் குறையை உணராதவன் பிறரால் துன்பம் அடையும்போது தன்னைச் சிறிதும் தவறு இல்லாதவனாக மதிப்பது இயற்கை, காதல் இயல்பை அறியாத கன்னிப்பெண் ஒருத்தியிடம் தன் காதல் துன்பத்தை உரைத்தால் அவள் என்ன பதில் கூறமுடியும் தன் கெஞ்சு மாத்திரம் அறியும் படியாக மெதுவாக மனத்திற்குள் ஏதாவது சொல்லிக்கொண் டாலும் பதில் ஒன்றும் கிடைக்காது. ஆனால், தன் துயரத்தைச் சொற்களால் வெளியிட்டால், அஃது ஒருவாறு அவனுக்கு ஆறுதல் அளிக்கக்கூடும்; அன்றியும், அவன் உணர்ச்சி அவனுக்கே நகையும் 1. அகத்திணை - நூற்பா. 53.

  • பேராசிரியர் டாக்டர் வ. சுப. மாணிக்கம் தமது தமிழ்க் காதல் என்ற நூலில் கைக்கிளைபற்றிக் கூறும் கருத்து இதற்கு முற்றிலும் மாறானது. அதுவே பொருத்த மானது. .