பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒருதலை வேட்கையும் ஒப்பில் கூட்டமும் 3& இவ்வேறுகோடற் கைக்கிளை, காமப்பொருளாகிய புலனெறி வழக்கில் வருங்கால், முல்லை கிலத்து ஆயரும் ஆப்ச்சிபரும் காந்தருவமாகிய களவொழுக்கம் ஒழுகி வரையுங்காலத்து அங்கிலத் தியல்புபற்றி வரைந்துகொள்வர்” என்ற நச்சினார்க்கினியரின் உரைப்பகுதி இதனை வலியுறுத்தும். முல்லைக்கலியின் முதலிரண்டு பாடல்களாலும் இவ்வழக்கம் நன்கு உணரப்பெறும். இக்கைக்கிளை ஆயர்குல முதல்வனாகிய கண்ணபிரானாலும் அக்குல மகளாகிய நப்பின்னையின்பொருட்டு நிகழ்த்தப்பெற்றது என்று அறிஞர் கூறுவர். இன்றும் ஏறு தழுவுதல் ஒரு விளையாட்டாக ஆண்டுதோறும் பலவிடங்களில் நடைபெற்று வருவதைக் காணலாம். அதற்கும் மகட்கொடைக்கும் இன்று யாதொரு சம்பந்தமும் இல்லை. ஆனால் சில சமயம் உயிர்க்கொடைதான் நடைபெறுகின்றது: எண்வகை மனங்களுடன் வைத்துப் பேசப்பெறும் ஆசுரம், இராக்கதம், பைசாசம் என்ற மூன்றனையும் கைக்கிளையாகக் கூறுவர் கச்சினார்க்கினியர். முன்னைய மூன்றும் கைக்கிளைக் குறிப்பே' என்பது தொல்காப்பியம். இளம்பூரணரும் இக்கருத்தையே கொண் டுள்ளார். இராக்கதம் என்பது காதலிக்கப்பட்ட பெண்ணை வலிந்து தம் வசப்படுத்தி மணந்துகொள்வது. பைசாசம் என்பது மூத்தாளையும், துயின்றாளையும், கள்ளுண்டு மயங்கினாளையும் கூடுதல். ஆசுரத்தை அரும்பொருள் விளை நிலை என்றும், பைசாசத்தைப் பேய் நிலை என்றும் பேசுவர் களவியலுரைகாரர். இவை மூன்றும் சிறந்தவை அல்ல. கைக்கிளைச் செய்யுள்களைப் பெரும்பாலும், ஆண்பாலார் தாம் பாடுவர். சிறுபான்மை பெண்பாலாரும் தமது ஒருபாற் காதலைப் பாடுதல் காணப்பெறும். ஒருபாற் காமத்தால் வருந்தும் ஒருவன் மடன்மா ஏறுவல் எனக் கூறுவதும் கைக்கிளை என்றே கச்சினார்க்கினியர் கூறிப்போக்தார். பிற்காலத்தார் மடலேறுவல் எனக் கூறுவது பெண்பாற் கைக்கிளைக்கும் உண்டு எனக் கூறி யுள்ளனர். கைக்கிளைக்கண் காதலைத் தானே சொல்லிக் கொள்ளுதலன்றிக் காதலி மாட்டுப் பயன்கொள்ளக் கருதுவ தில்லை. அங்ங்னம் பயன் கருதிச் சொல்லப்பெற்றால் அதனைப் பெருந்திணையில் சேர்க்கவேண்டும். தலைவன் காதலிக்கப் பட்டாளைத் திருமணம் புரியும்பொருட்டு மடன்மாவேறினால் அது 3. களவியல்-நூற்பா 14