பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை பெருங் திணையாகும். பிற திணைக்கு ஏதுவாய காதலுக்குக் கைக் கிளை தோற்றுவாய் செய்வதால் அதனை ஆசிரியர் தம் நூலில் முதலில் வைத்து நூற்பா செய்துள்ளார். "கைக்கிளை முதலாப் பெருங்தினை இறுவாப் முற்படக் கிளக்த எழுதினை என்ப" என்பது அகத்திணையியலின் முதல் நூற்பா. கைக்கிளை - பேரின்பக் கருத்து : அகப்பொருள் துறை. களுக்குப் பேரின்பக் கருத்து உரைக்கப்பெறுங்கால் இக் கைக்கினைக்கும் விளக்கம் கூறப்பெறுகின்றது உயிர்கள் ஆண்டவனை அறியும் பக்கு வம் எய்தாத காலத்திலேயே இறைவன் அவர்களை உய்விக்கக் கருதி அருடசெயல்கள் நிகழ்த்துவதாகத் தத்துவ நூல்கள் கூறும். இந்த அருடசெயல் கைக்கிளை போல்வது. என்று கூறுவர் அறிஞர்கள். பெருக்திணை - பெயர்க்காரணம் ஒவ்வாக் காதலைப் பெருந்திணை என்று மேலே குறிப்பிட். டோம். இஃது ஏனைய திணைகளெல்லாவற்றிலும் பெரிதாதலால் ஆசிரியர் தொல்காப்பியர் இதனைப் பெருக்திணை' என்று. குறியீடு செய்தார்.* எவ்வாறு இது பெரிய திணையாகும் என்பதை நே க்குவோம். எண்வகை மணங்களுள் பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம் என்ற நான்கும் பெருந்தினை யின்பாற்படும். பிரம்மம் என்பது, நாற்பத்தெட்டு யாண்டு பிரம்மச் சரியம் காத்து கின்றவனுக்குப் பூப்பெய்திய பன்னிரண்டு ஆண்டுடைய பெண்ணை அணிகலன் அணிந்து தானமாக மணம் செய்து கொள்ளக் கொடுப்பது. பிரசாபத்தியமாவது, மகள் கோடற்குரிய கோததிரத்தா மகள் வேண்டிச் சென்றால் பெண்ணின் பெற்றோர மறுக்காமல் இயைந்து கொடுப்பது. ஆரிடம் என்பது, பொன் கொம்பும் பொன் குளம்பும் உடைய பசு, காளை இவற்றைச் செய்து அவற்றினிடையே பெண்ணை கிறுத்தி கீச்வார்த்துக் கொடுப்பது. தெய்வம் என்பது, வேள் விக்கு ஆசிரிய சாப் நின்றார் பலருள்ளும் ஒருவாக்கு வேள்வித்தி முன்னர்க், காணிக்கையாக ஒரு பெண்ணைக் கொடுப்பது. இவற்றுள் முதல் மூன்றனையும் முறையே அறநிலை, ஒப்பு. பொருள்கோள் என்று.

  • பேராசிரியர் டாக்டர் வ. சுப. மாணிக்கம் தமது தமிழ்க்காதல். என்ற நூலில் பெருந்திணை பற்றிக் கூறும் கருத்து. இதற்கு முற்றிலும் மாறானது. இதுவே பொருத்தமானது.