பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒருதலை வேட்கையும் ஒப்பில் கூட்டமும் - త్త3 என்று கூறுவர் ஆசிரியர் தொல்காப்பியனார். தாமே பொருளீட்டி வாழ்க்கை கடத்துதற்குரிய வினைத்திறமின்றிப் பிறர்பால் தாழ்ந்து, தம்முணர்வின்றித் தொண்டு செய்தொழுகுவோர் அடியோர். தம் உணர்வு மிகுதியால் தாமே ஒரு தொழிலைச் செய்து முடிக்கவல்லவர் வினைவலர். தாமாக ஒன்றைச் செய்யாது, பிறர் இத்தொழிலை இவ்வாறு செய்க !’ என ஏவினால் அவர் ஏவிய வண்ணம் செய்யும் இயல்புடையோர் ஏவல்மரபின் ஏனோர். "இவர் அகத்தினைக்கு உரியரல்லரோவெனின், அகத்திணை யாவன அறத்தின் வழாமலும், பொருளின் வழாமலும் இன் பத்தின் வழாமலும் இயலஸ் வேண்டும் ; அவையெல்லாம் பிறர்க்குக் குற்றேவல் செய்வார்க்குச் செய்தல் அரிதாகலானும், அவர் காணும் குறைபாடுடையதாகலாலும், குறிப்பறியாது வேட்கை வழியே சச்சக் கருதுவராகலானும், இன்பம் இனிது கடத்துவார் பிதவேல் செய்யாதார் என்பதனாலும் இவர் புறப்பொருட்கு உரியவசாயினார் என்க’ என்ற இளம்பூரணரின் உரை இதனைத் தெளிவாக்கும். சில சமயம் அகனைத்தினைக்குரிய தலைமக்களும் கைக்கிளைப் பெருந்திணைக்கு உரியவராவர். உரியராயினவாறு அகம் பொருள் இன்பங்கள் வழுவ மகளிரைக் காதலித்தலான் என்றவாறாயிற்று: என்ற உரையாசிரியரின் உரைக்குறிப்பு இதனை வலியுறுத்தும். மேற்கூறிய நிலையில் வைத்து இன்றைய உலகில் நடை பெறும் இன்ப நிகழ்ச்சிகளை ஆராய்ந்தால் தொல்காப்பியனார் கருத்துப்படி உயர்ந்தோர் யாவர், இழிந்தோர் யாவர் என்பது தெளிவாகப் புலனாகும். இந்த எழுதினை வழக்குகளையும் அறியும் போது ஒவ்வொருவரும் தத்தம் அக வாழ்க்கையை உயர்ந்த குறிக் கோள் நிலையில் கடத்தத் திருத்தி அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கட்டாயம் ஏற்படத்தான் செய்யும். மகளிரை அஃறிணைப்பொருளாகிய உடைமை போலக் கருதிப் பிறர்பால் கேட்டுப் பெறுதலும், கொடாராயின் சுற்றத்தார்க்குத் தெரிந்தோ தெரியாமலோ வன்மையினால் கவர்ந்து கூடுதலுமான செயல் முறைகளை மணமெனக் கூறும் வழக்கம் தமிழர்களிடத்தில் இல்லை. ஆகவே, இத்தகைய பொருந்தா மணமுறைகளுக்குத் தமிழ் நூல்களில் சான்று காணல் அரிது. அன்பொடு புணர்ந்த ஐந்திணை என்று ஆசிரியர் தொல்காப்பியர் கூறியுள்ளனராதலின், அதற்கு முன்னும் பின்னும் கூறப்பெற்ற ஒருதலைக் காமமாகிய கைக்கிளையிலும். ஒவ்வாக் காமமாகிய பெருந்திணையிலும் இருவர்பாலும் ஒத்தி அன்பினைக் காண்டால் அரிது என்பதை உணர்தல் வேண்டும். இத்தகைய பொருத்தமற்ற கூட்டுறவுகள் எக்காலத்திலும் எங் காட்டிலும் காணப்பெறுபவையே. பொருந்தாத