பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் மு. வரதராசனார். எம். ஏ. எம். ஒ. எல்., பிஎச். டி. (Professor of Tamii, University of Madras) மனமுவந்தளித்த அணிந்துரை - தொல்காப்பியம் தமிழ் மொழியின் பண்பாட்டையும் தமிழிலக்கியத் தொன்மையையும் காகரிகச் சிறப்பையும் விளக்கும் பழம்பெரு நூல் ஆகும். பொதுவாக, இலக்கண நூல்களை விரும்புவார் அருகிவரும் இக்காலத்திலும், தொல்காப்பியத்தைப் பலர் நாடும் காரணம் என்ன? அப்பெரு நூல் இலக்கண நூலே ஆயினும், எழுத்திற்கும் சொல்லிற்கும் மட்டும் இலக்கணம் உரைப்பதோடு கில்லாமல், தமிழர் வாழ்க்கையை ஒட்டி அமைந்த இலக்கியத்திற்கும் இலக்கணம் கூறும் நூலாக இருத்தலே காரணம் ஆகும். அதனால்தான், தொல்காப்பியப் பொருளதிகாரம் இலக்கிய வரலாற்று அறிஞர்க்கும் திறனாய்வாளர்க்கும் ஒருங்கே பயன் கல்குவதாக உள்ளது. இத்தகைய சிறப்புடைய நூற்பகுதியைத் திறம்பட ஆராய்க்து தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை' என்னும் இக்துரல் வடிவில் விளக்கியுள்ளார், தமிழ்ப் பேராசிரியர், திரு. ந. சுப்பு ரெட்டியrர். அவர் அறிவியல் துறையிலும் பட்டம் பெற்ற அறிஞர்; அவ்வனவில் கில்லாமல், தொடர்ந்து உளவியல் முதலாய துறைகளில் நூல் பல கற்றுத் தேர்ந்து தமிழில் நூல் பல இயற்றியுதவியவர். ஆதலின், தொல்காப்பியப் பொருளதிகாசத்தை ஆயுங்காலத்திலும் அவர்க்கு உளவியல், உயிரியல் முதலாய அறிவியல்துறைகள் மிகப் பயன் பட்டுள்ளன என்பதை இக்நூலில் காணலாம். தொல்காப்பியர் கூறும் அகப்பொருள் புறப்பொருள் பற்றிய இலக்கணங்களை வெவ்வேறு புதிய தலைப்புகளில் இவர் விளக்கம்பெறச் செய்துள் :ளார். தமிழர்கள் காதலை மிகமிகத் தூய்மையானதாக வைத்துப் போற்றினர்' என்பதைப் பலவிடங்களிலும் தெளிவித்துள்ளார். பழங்கால அகப்புற மரபுகளை ஆங்காங்கே பொருத்தமுற விளக்கி