பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

డ్డ8 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை என்று கூறியிருப்பதையும் சிந்தித்துப் பார்த்தல் வேண்டும். உலக வழக்கு’ என்பது, உலகத்தார் ஒழுகிவரும் ஒழுக்கத்துடன் ஒத்து வரும் கிகழ்ச்சிகள். இந்த இரண்டு வகையும் கலந்து வருவதுதான் பாடல் சான்ற புலனெறி வழக்கம், புலவர்கள் படைத்துக் காட்டும் அகப்பொருள் சம்பந்தப்பட்ட திகழ்ச்சிகள். இந்த இரண்டும் கலந்து வருவதைச் செய்யுள் வழக்கு என்று குறிப்பிடுவதும் உண்டு. அகப்பொருள் மாந்தர் : இந்த அகப்பொருள் உலகில், சிறப்பாக ஐக்திணை நெறியில், காம் காணும் மசக்தர்களைப் பற்றித் தெரிந்துகொள்வது மிகவும் இன்றியமையாதது. "இல்லது, இனியது, நல்லது” என்று புலவர்களால் காட்டப்பெற்ற இந்த அகனைந்திணை ஒழுக்கத்தில் ஒழுகுபவர்கள் தலைமகனும் தலைமகளும் ஆவர். இவர்கள் ஒழுக்கம் செவ்விதாக நடைபெறு வதற்குத் துணையாக நிற்பவர்கள், பல சந்தர்ப்பங்களில் அவ்விருவரும் சந்திக்க வாயில்களாக கின்று உதவுபவர்கள், பதினால்வர் ஆவர். அவர்கள் தோழி, கற்றாப், செவிலி, பாங்கன், பார்ப்பார், பாணன், விறலியர், அறிவர், பரத்தையர், கண்டோர், கூத்த ர், இளையர், விருந்தினர், தேர்ப்பாகன் ஆகியோர். தலைவனும் தலைவியும் இலட்சிய வாழ்வு வாழ்வதற்கு இவர்கள் துணைபுரிகின்றனர். இவர்களுள் களவுக் காலத்தில் வாயில்களாக இருப்பவர் யாவர், கற்புக் காலத்தில் அங்ங்னம் இருத்தலுக்கு உரியவர் யாவர் என்றெல்லாம் தொல்காப்பியர் வரையறைப் படுத்திப் பேசுவர். அவற்றைப் பின்னர்க் காண்போம். இவர்கள் ஒவ்வொருவரைப்பற்றியும் ஒரளவு அறிந்துகொண்டால்தான் கவிஞர்கள் படைத்துக்காட்டும் இலட்சிய வாழ்வு கன்றாக விளங்கும் : அவர்கள் கூறும் அகப்பொருள் உலகத்தில் நன்றாக உலவ முடியும் ; ஒவ்வொரு நிகழ்ச்சியின் அடிப்படைக் கருத்து களும் தெளிவாகப் புலனாகும். தலைமகன் தலைமகன் என்பான் கல்வி, அறிவு, ஒழுக்கங் களால் சிறந்தவன் : வழிவழியே வரும் உயர் குடியில் பிறந்தவன் : பெருஞ்செல்வத்தினன். இவனும் தலைவியும் ஒருயிரும் ஈருடலும் போன்று கட்பினையுடையவர்கள். இவர்கள் தொடர்பு பிறவி தோறும் தொடர்ந்து வருவதாகக் கூறப்பெறும். இதனைத் தொல்காப்பியர்,

  • இவ்வாசிரியர் எழுதியுள்ள அகத்திணைக் கொள்கைகள்: என்ற நூலில் (பாரி நிலையம், 18 , பிராட்வே, சென்னை - 108.) இவர்கள் பற்றிய செய்திகள் விரிவாக ஆராயப்பெற்றுள்ளன.