பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5C தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை தலைமகள் : அகப்பொருள் நூல்களில் காணப்பெறும் தலை மகளைக் குறித்துத் தொல்காப்பியர் பல இடங்களில் பரக்கக் கூறி யுள்ளார். ஓரிடத்தில், க. கற்பும் காமமும் கற்பால் ஒழுக்கமும் மெல்லியியற் பொறையும் கிறையும் வல்லிதின் விருத்துபுறத் தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறரும்' என்பவை தலைமகளுடைய குணங்களாகக் குறிப்பிடப்பெற். றுள்ளன. கற்பு என்பது, கணவன் முதலியோர் கற்பித்த நிலையில் திரியாத கல்லொழுக்கம். காமம் என்பது, அன்பு. கற்பால் ஒழுக்கம். என்பது, தன் குலத்திற்கு ஏற்றவாற்றான் ஒழுகும் ஒழுக்கம், மெல் இயற்பொறை என்பது, மெல் என்ற கெஞ்சினராய்ப் பொறுக்கும் பொறை. கிறை என்பது, மறைக்கக்கூடிய செயல்களைப் பிறர் அறி யாதவாறு மறைக்கக்கூடிய நெஞ்சு, வல்லிதின் விருந்து புறந்தருதல் என்பது, வறுமையையோ செல்வத்தையோ கருதாது இயன்றவரை விருத்தினரைப் பாதுகாத்து அவர்களை மனம் மகிழ்வித்தல். கற்றம் ஒம்பல் என்பது, தொடர்புள்ள மக்களைப் பாதுகாத்து, அவர்கள் உண்டபின் தான் உண்டல், அகப்பொருள் நூல்களில் தலைமகள் பன்னிராட்டைப் பிராயத்தளாய்க் குறிக்கப்பெறுவாள். காண், மடம், அச்சம், பயிர்ப்பு என்பவற்றை இவளது குணங்க ளாகக் கூறுவர் களவியலுசையாசிரியர். காண் என்பது, பெண்டிர்க்கு இயல்பாக உள்ளதொரு தன்மை. மடம் என்பது, கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை, அச்சம் என்பது, பெண்மையில் தான் காணப்படாததோர் பொருள் கண்டவிடத்து அஞ்சுவது. பயிர்ப்பு என்பது பயிலாத பொருட்கண் அருவருத்து நிற்கும் கிலைமை. தலைமகள் கற்பு நெறியில் ஒழுகிக் கணவனைப் பிரிங் திருக்கும் காலங்களில் மக்கள், சுற்றம் முதலானவர்களைப் பாது காக்கும் கடமையிலிருந்து தவறாள். அன்றியும், களவு நெறியில் ஒழுகும் போது தங்தை, தாயர் முதலியவர்களின் கட்டுப்பாட்டிற்கு அடங்கி கடக்க வேண்டியவள். தலைவன் தரும் பல விதத் துன்பங் களையும் பொறுத்திருக்கும் குணமுடையவள். இங்கிலையில் தன் துயரைச் சிறிதும் கருதாது தலைவன் துயரையே பெரிதும் கருதிக் கவலும் தலைவியின் பெருமை போற்றத்தக்கது, களவுக்காலத்தி லும் சரி, கற்புக்காலத்திலும் சரி, இவள் தலைவனுடைய அருங் 7. கற்பியல் - நூற்பா 11 8. இறையனார் களவியல் - நூற்பா 2 - இன் உரை.