பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்தினை உலக மாக்தர் ざ選。 குணங்களையெல்லாம் தோழியிடம் சொல்லிப் பாராட்டுவாள். இவளது கரந்த ஒழுக்கத்தினை அறியாத பெற்றோர், வேறொரு வருக்கு இவளைத் திருமணம் புரிய ஏற்பாடுகள் செய்யும் போது, இவள் அவர்களறியாது தலைவனுடன் அவனுணர்ச் சென்று, அவனை மணக்துகொள்வாள். இச்செயலை அகப்பொருள் இலக்கணம் உடன்போக்கு என்று குறிப்பிடும். இவளைப் பற்றி அகப்பொருள் நூல்கள் கூறுவனவற்றையெல்லாம் தொகுத்துக் கூறினால் மிக விரியும். - செவிலி : செவிலி என்பவள் தலைவியை வளர்த்த தாய், தலைவிக்கு உயிர்த்தோழியாக இருப்பவளை ஈன்ற தாய் : கற்றாய்க்குத் - தலைவியைப் பெற்றவளுக்குத் - தோழியாக இருப்பவள். இவ்வாறு இலக்கண நூல்கள் கூறும். இவள் தலைவியிடம் போன்பு கொண்டவள். தலைவிக்கு உணவு முதலியன கொடுத்து, அவளைப் பாதுகாத்து, இரவிலும் தன் அருகே அவளைத் துயில் கொள்ளச் செய்து காவல் புரிபவள். தலைவியின் கரந்த ஒழுக்கத்தைத் தோழியின் மூலம் இவள் அறிவாள். தலைவி தலைவனுடன் உடன் போகும் காலத்து வருந்தி அவளைத் தேடிச் செல்வாள். காட்டில் எதிரில் வரக்கூடிய அந்தணர், கண்டோர் ஆகியவர்களிடம் தன் மகளைப் பற்றி வினவு வாள். நற்றாயுடன் சேர்ந்துகொண்டு தலைவியின் தோற்ற: வேறுபாடுகளின் காரணத்தை அறியக் குறத்தி முதலியோரைக் கொண்டு குறி பார்த்து ஆராய்வாள். இவள் தலைமகளைப் பெற்ற கற்றாயினும் பெரிதும் அன்பும் அக்தரங்கமும் உடைய விளாதலாள், இக்களவு வரலாற்றிற்குச் சிறந்தவளாய்த் தாய் என்றே: சிறப்பித்துக் கூறப்பெறுவாள். ஆய்ப்பெருஞ் சிறப்பின் அருமறை கிளத்தலில் தாய்எனப் படுவோள் செவிலி யாகும்.9 என்பது தொல்காப்பியக் களவியல் நூற்பா. தோழி : தலைவன் தலைவியின் காதல் வாழ்க்கையில் பெரும் பங்கு எடுத்துத் துணை புரிபவள் தோழி. தோழி தலைவியுடன் ஒன்றின கெஞ்சினையுடையவள். தலைவிக்கும் தோழிக்கும் இடையே உள்ள நட்புரிமையைத் தலைவனுக்கும் பாங்கனுக்கும் இடையேயும் காண முடியாது. தலைவியினுட்ைய செயல்கள் யாவற்றையும் இவள் அறிவாள். இவள்-தன்னலம் சிறிதும் இல்லாது, தலைவன் தலைவியரது கலத்தை மட்டிலும் 9. கற்பியல் - நூற்பா 34.