பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

リ4。 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை பட்டாரும் என இருவகையர். அவ்விருவரும் உரிமை பூண்டமையாற் காமக்கிழத்தியர்பாற்பட்டனர்”. இப்பரத்தையர் கூட்டுறவினால் தலைவன் தலைவியரிடையே சிறு பிணக்கு-ஊடல்-கிகழும். அகப்பொருள் நூல்களில் காணும் பரத்தையர், ஒவ்வொரு தலைவனைப் பற்றி கின்றவர் என்று கொள்ள இடம் உண்டு. இளம்பூரணர், காதற்பரத்தையர் கூட்டம் ஒத்த காமமாகியவாறு என்னை எனின், அவரும் பொருளானாதல், அச்சத்தினாலாதல் அன்றி அன்பினாலாதல் கூடுதலின் அதுவும் கந்தருவப்பாற்படும். அவ்வாறன்றி அவரைப் பிறிது நெறியாற் கூடுமாயின், இவன் (தலைவன்) மாட்டுத் தலைமையின் என்பது உணர்ந்துகொள்க’ என்று கூறியிருப்பதை எண்ணிப் பார்க்கவேண்டும். இக்காதற்பரத்தையர் தலைவிமாரோடு எத்தகைய பகையும் கொள்ளாது நெருங்கிப் பழக முயல்வர். இவர்களில் வயதில் மூத்தவராக இருந்தால் தலைவன் தலைவியரிடையே நிகழும் பிணக்குகளைத் தீர்த்து வைக்கவும் முன்வருவர்: தலைவிக்கு அறிவுரைகள் கூறி, அவளைத் தலைமகனோடு கூட்டிவைத்து மகிழ்வர். இதனை, காதற் சோர்விற் கடப்பாட்டாண்மையில் தாய்போல் கழறித் தழி இய மனைவியைக் காய்வின்று அவன் வயிற் பொறுத்தற் கண்ணும்: என்ற கற்பியல் நூற்பாப் பகுதியால் அறிந்துகொள்ளலாம். ஏனையோர் கண்டோர் என்பார் களவுக்காலத்தில் தன் பெற்றோர் தன் களவினை உணர்ந்து தன்னை வேற்றவர்க்கு மணம் நிச்சயிக்கப் போகும்போதும், தலைவி தலைவனுடன் சென்று அவன் மனையில் வரைந்துகொள்ளும் நோக்குடன் செல்லும்போதும் காட்டு வழியில் சக்திக்கும் மாந்தர், அறிவன் என்பார், தலைவன் தலைவியருக்குக் குரவர்களாக இருப்பவர்களும் துறவுள்ளம் படைத்த அறிஞர்களும். பாணன் என்பான், தலைவனைப் பரத்தையரிடம் கூட்டி வைப்பதற்குக் கருவியாக இருப்பவன். தலைவியிடம் இவன் தலைவன் பொருட்டுத் துரது வரும்போது, தலைவி இவனை வெறுத்துக் கடிவாள். பார்ப்பார் என்பார், பார்ப்பனக் குலத்துப் பிறந்தவர்; தலைவனுக்கு அடிக்கடி அறவுரை கூறுபவர். விறலியர் என்பார் ஆடலும் பாடலும் 12. கற்பியல்-நூற்பா 10-இன் உரை 13. கற்பியல் -ைஉரை