பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐக்தினை உலக மாந்தர் 5ざ நிகழ்த்தும் ஒருவகைச் சாதிப்பெண்டிர். தலைவனது பரத்தையிற் பிரிவிற்கு இவர்களும் கருவியாக இருப்பர். கூத்தர் என்பார், தலைவனுக்கு இன்றியமையாத கூத்து கடத்தும் ஆண்கள். இளையர் என்பார், தலைவனைவிட்டுப் பிரியாது அவனுடன் இருந்து அவனுக்குக் குற்றேவல் செய்யும் ஏவலர். விருந்தினர் என்பார், தலைவனும் தலைவியும் அன்புசெய்து விருந்தோம்பும் மக்கள். தேர்ப்பாகன் என்பவன், தலைவனுடைய தேரோட்டி: அவன் தலைவியைவிட்டுப் பிரியும்போதும் மீண்டும் தலைவன் தலைவியை காடி வரும்போதும், தேரை கடத்தி வருபவன். குதினை யின் இயல்பை அறிந்து விரைவாக ஒட்டிச் செல்வதில் வல்லவன். இவற்றைத் தவிர, இவர்களைப்பற்றி அகப்பொருள் நூல்களில் அதிகமான செய்திகளை அறிந்துகொள்ள இயலவில்லை. மேற்கூறப்பெற்ற மாக்தர்களைப்பற்றி ஒரளவு தெரிந்து கொண்டால்தான் அகப்பொருள் பாடல்களை நன்கு சுவைக்க முடியும்; பாடல்களில் கூறப்பெறும் கிகழ்ச்சிகளும் சந்தர்ப்பங்களும் கூற்றுகளும் நமக்குத் தெளிவாகும். காதலின் துய்மையையும் சிறப்பையும் போற்றிய கவிஞர்கள் அதனை நித்தியமானதாகவும் கூறியுள்ளனர். அங்ங்னமே, காதல்புரியும் தலைவன் தலைவி -யையும் கித்தியமானவர்களாகவே படைத்துக் காட்டியுள்ளனர்.* இலட்சியக் காதலர்களாகிய அவர்களை, இன்று நாம் தவதும் பித்தலாட்டமும் கிறைந்த உலகில் காணும் காதலர்களுடன் ஒப்பிட் டுப் பார்க்கக்கூடாது. காதல் என்ற தெய்விக உணர்ச்சியைத்தான் அவர்கள் காதலன் என்றும், காதலி என்றும் உருவாக்கிவிட்டார் என்றுகூட நினைக்கவேண்டியுள்ளது. அவர்கள் ஒரு காலத் தில் ஓரிடத்தில் இருக்கக்கூடியவர்கள் அல்லர் : என்றும் எல்லா விடத்தும் கிரந்தரமாக இருப்பவர்கள் : இருக்க வேண்டியவர்கள். அவர்களைப் பெயர் கூறிச் சுட்டுவதுகூடத் தவறு என்று கருதினர் பண்டையோர். எனவே, தொல்காப்பியனாரும் இதனை, மக்கள் நுதலிய அகன் ஐங் தினையும் சுட்டிஒருவர்ப் பெயர்கொளப் பெறாஅர்."

  • ஆழ்வார்கள் தலைவனை இறைவனாகவும், தலைவியை ஆன்மாவாகவும் கொண்டு பாடியுள்ள பாசுரங்கள் கன்னெஞ் சத்தையும் கரைக்கும் பான்மையன.

14. அகத்திணை - நூற்பா. 7