பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இன்ப வாழ்வின் இருவேறு நிலைகள் களவு கற்பு : அகத்துறையில், காதல் இன்பத்தைத் துய்ப் பதில், களவு, கற்பு என்ற இரு வேறு நிலைகள் உள்ளன. அகப் பொருள் பாடல்களைப் பயில்வோர் இந்த இரண்டு நிலைகளையும் காண்பர். காதலனும் காதலியும் தொல்காப்பியர் கூறும் பால் வரைத் தெய்வம்’ என்ற ஊழின் துணையால், முன்பின் அறியாத வர்களாக இருந்தாலும் ஒரிடத்தில் சக்தித்துக் காதல் கொள்ளுகின் றனர் : கலந்து இன்பங்துய்க்கின்றனர். இதனைக் களவு என்று. அகப்பொருள் இலக்கணம் கூறும். இவ்வாறு களவு முறையில் காதல் புரிபவர்கள் பிறகு, பல்லோாறிய மணந்துகொள்வர். இதனைக் கற்பு என்று கூறுவர், அகப்பொருள் நூலார். முதலில் களவு ஒழுக்கத்தில் ஈடுபட்டு, அப்பால் திருமணம் புரிந்துகொண்டு, இல்வாழ்க்கையாகிய கற்பொழுக்கத்தை மேற்கொள்வது களவின் வழி வந்த கற்பு’ என்று சொல்லப்பெறும். களவு ஒழுக்கமே கிகழாமல் முதலிலேயே திருமணம் செய்துகொண்டு கணவன். மனைவியாக வாழும் கிலையும் அக்காலத்தில் இருந்தது. கள வின் வழி வாராக் கற்பு’ என்று இதனைக் குறிப்பர். இந்த இரண்டு. வகைக் கற்பிலும் கனவின் வழி வக்த கற்பே சிறப்புடையது என்று பண்டைத்தமிழர்கள் எண்ணினர். அகவாழ்வில் காணும் இந்தக் களவு, கற்பு என்ற இரண்டு கைகோள் வகைகளையும் பற்றி ஓரளவு விரிவாகத் தெரிந்துகொள்வோம். கைகோள் - ஒழுக்கங் கோடல்’ என்பர் கச்சினார்க்கினியர். ஒழுக்கம் என்பது இதன் கருத்து. களவு-விணக்கம், களவாவது, பிணி மூப்புகளின்றி, எஞ்ஞான் றும் ஒரு தன்மையராய், உருவும் திருவும் பருவமும் குண்னுங்குலமும் அன்பும் முதலியவற்றால் ஒப்புமையுடையாாய தலைமகனும் தலைமகளும், பிறர் கொடுப்பவும் அடுப்பவுமின்றி, ஊழ் வகையால் தாமே எதிர்ப்பட்டுக் கூடுவது." தமது மகள் பிறர்க்கு உரியவள் என்று இருமுதுகுரவரால் (பெற்றோரால்) கொடை எதிர்தற்குரிய தலைவியை, அவர் கொடுப்பக் கொள்ளாது, இருவரும் கசக்த: உள்ளத்தோடு எதிர்ப்பட்டுப் புணர்தலின் களவு எனப் பெயர்