பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை பெற்றது. இக்களவு அன்பொடு புனர்ந்ததாதலின் “காமக்கூட்டம்?? என்றும் வழங்கப்பெறும். இன்னும் இதனை மறைக்த ஒழுக்கம்", மறை, அருமறை என்ற சொற்களாலும் தொல்காப்பியர் குறிப்பர். களவு என்பதற்குப் பிறர்க்குரிய பொருளை மறையிற் கோடல் என்று பொருள் கூறுவர் இளம்பூரணர். வேதத்தை "மறை நூல்' என்று சொல்வது போலவே, அறநிலை வழுவாமல் காதலர்கள் காக்து ஒழுகும் இதனைக் களவு என்று பண்டையோர் குறித் துள்ளனர் என்பதை அறிதல்வேண்டும். களவு என்னும் சொற் கேட்டுக் களவு தீதென்பது உம், காமம் என்னும் சொற்கேட்டுக் காமம் தீதென்பது உம் அன்று;மற்று அவைகல்ல.ஆமாறும் உண்டு” என்று களவியல் உரைகாரர் கூறுவதையும், அதற்கு அவர் கூறும் சான்று களையும் இவ்விடத்தில் சிக்தித்துப் பார்க்க வேண்டும். ஒரு பெண் தன் உறவினரோடு சண்டையிட்டுக்கொண்டு நஞ்சுண்டு சாவதற்குத் தீர்மானம் செய்து, சமயம் பார்த்து உண்பதற்கு நஞ்சைத் தேடி வைத்திருந்தாள். அருளுடையான் ஒருவன் அந்த நஞ்சினை எடுத்து மறைத்துவிட்டான்; அப்பெண் கஞ்சினைத் தேடும்போது அது கிடைக்கவில்லை. அவளும் அதனை உண்டு சாகாமல் உயிர் தப்பினாள். இவ்வாறு அவளை உயிர் தப்புவிக்கச் செய்யப்பட்ட களவு கல்லதாயிற்று. காமம் கல்லது என்பதற்கும் அவர் எடுத்துக் காட்டு தருகின்றார். காமம் என்பது ஆசை. ஒருவர் சுவர்க்கத்தின் கண் சென்று போகக் துய்ப்பல் என்று கூறுவதும், உத்தரகுரு வின்கண் சென்று போகக் துய்ப்பல் என்று கூறுவதும், நன்ஞானம் கற்று வீடு பெறுவல் என்று கூறுவதும், தெய்வத்தை வழிபடுவல் என்று கூறுவதும் காமத்தின்பாற்பட்டவையே. இவ்வகைக் காமம் மேன்மக்களால் புகழப்படுகின்றது ; மறுமைக்கும் உறுதி பயக் கின்றது. ஆகவே, இது கல்லது. இளம்பூரணரும், களவு என்னும் சொற்கண்டுழியெல்லாம் அறப்பாற்படாதென்றல் அமையாது. களவாவது, பிறர்க்குரிய பொருளை மறையிற்கோடல். இன்ன தன்றி, ஒத்தார்க்கும் மிக்கார்க்கும் பொதுவாகிய கன்னியரைத் தமர் கொடுப்பக் கொள்ளாது, கன்னியர் தம் இச்சையினால் தமரை மறைத்துப் புணர்ந்து, பின்னும் அறகிலை வழாமல் கிற்றலால் இஃது அறமெனப்படும்' என்று கூறியுள்ளார்.2 களவு தமிழர் முறையே களவினை ஆரியரது எண்வகைப் பட்ட மணவகைகளுள் காந்தருவத்தின்பாற்படும் என்பர். 1. இறையனார் களவியல் - நூற்பா ! - இன் உரை 2. களவியல் - அவதாரிகை, 13 செய்யுளியல்-நூற்பா178