பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$66 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை என்பது. இங்ங்ணம் கூடினோர் தம் வாழ்நாள் முழுவதும் கூடி வாழ்வர் என்ற கட்டாயம் இல்லை. எதிர்ப்பட்ட அளவில் வேட்கை மிகுதியால் கூடிப் பின் அன்பின்றிப் பிரிந்து மாறும் வரம்பற்ற நிலையும் இவ்வகை மணத்திற்கு உண்டு. இன்று உலகியல் வழக்கில் இத்தகைய நிகழ்ச்சிகளை நாம் காணத்தான் செய்கின் றோம். ஆனால், தமிழர் கூறும் களவொழுக்கமோ, இருவருள்ளத்தும் உள் நின்று சுரங்த அன்பின் பெருக்கினால், தான், அவள்” என்ற வேற்றுமையின்றி, இருவரும் ஒருவராயொழுகும் உள்ளப் புணர்ச்சி யாகும். இதனை இறையனார் களவியல், அதுவே, தானே அவளே தமியர் கானக் காமம் புணர்ச்சி இருவயின் ஒத்தல்" என்று குறிப்பிடும். இவ்வுள்ளப் புணர்ச்சி நிகழ்ந்த பின்னர் ஒருவரையொருவர் இன்றியமையாதொழுகும் உயிரோரன்ன செயிர்தீர் நட்பே சாந்துணையும் கிலைபெற்று வளர்வதாகும். உள்ளப்புணர்ச்சி நிகழ்வுற்ற பின்னர், ஒருவரையொருவர் பிரிவின்றியொழுகும் அன்பின் துண்டுதலால் உலகறிய மணந்து வாழும் கற்பென்னும் திண்மை,தமிழர் ஒழுகலாறாகிய களவொழுக் கத்தின் முடிந்தி பயனாகும். உலகியலில் நேரிடும் பல வகை இடையூறுகளால், ஒருவரையொருவர் மணந்துகொள்ள இயலாமல்: உள்ளப்புணர்ச்சியளவே கூடி வாழ்ந்து, பின்னர் இறந்த காதலரும் தமிழகத்தில் இருந்தனர் என்பதற்குத் தருமதத்தன் - விசாகை என்பாரின் வரலாறே சான்றாகும். இவர்கள் இருவரும் யாழோர் மணமுறையில் பொருக்தியவர்கள் எனத் தம்மை நோக்கி ஊரார் கூறும் பழிமொழியை விலக்கித் தம் வாழ்நாள் முழுவதும் மெய்யுறு: புணர்ச்சியை விரும்பாது, உள்ளப்புணர்ச்சியளவில் கின்று உயிர் துறந்த வரலாறு நாம் ஈண்டு நினைவுகூர்தற்பாலது. கந்தர்வ வழக்கில் மெய்யுறு புணர்ச்சி முதற்கண் தோன்றும். அதன் பயிற்சியால் உள்ளப்புணர்ச்சி நிலைபெற்றுச் சாகுமளவும். காதலர்கள் கூடி வாழ்தலும் உண்டு; உள்ளப்புணர்ச்சி தோன்றாது, தம் எதிர்ப்பட்டாரைக் கூடி மாறுதலும் உண்டு. சிந்தாமணியில் காணும் சீவகன் - தேசிகப்பாவை கூட்டம் இதற்கு ஒர் எடுத்துக் காட்டாகும். என்றும் பிரியா கிலையில் நிறை கடவாது அன்பினாற் 6. இறையனார் களவியல் - நூற்பா 2. 7. மணிமேகலை - சிறைசெய் காதை - அடி (82 - 142} 8. சீவகசிந்தாமணி - பதுமையார் இலம்பகம்