பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்ப வாழ்வின் இருவேறு நிலைகள் ÉS Í கூடும் உள்ளப்புணர்ச்சியே களவொழுக்கத்தின் சிறப்பியல்பாகும். இதுவே தமிழியல் கூறும் களவு மனத்திற்கும், வடநூல் குறிப்பிடும் கந்தர்வ மணத்திற்கும் உள்ள உயிர்கிலையாய வேற்றுமையாகும். இதனால்தான் தொல்காப்பியனார் இதனை அன்பொடு புணர்ந்த ஐக்திணை மருங்கிற் காமக் கூட்டம்’ என்று குறிப்பிட்டார் : குறுங் தொகையாசிரியர் அன்புடை நெஞ்சங் தாங்கலந் தனவே என உணர்த்தினார்.9 ஆரிய மணமாகிய கந்தருவத்திற்கும் தமிழரின் களவு மணத்திற்கும் உள்ள வேற்றுமையையும், தமிழியல் வழக்கமெனச் சிறப்பித்து உரைக்கப்பெறும் களவொழுக்கத்தின் துய்மையினை யும் ஆரிய அரசன் பிரகத்தனுக்கு அறிவிக்கும் நோக்கத்துடன்தான் கபிலரின் குறிஞ்சிப்பாட்டும் எழுந்தது, இது, தலைவியின் வேற்றுமை கண்டு வருந்திய செவிலிக்குப் பாங்கி அறத்தொடு கிற்கும் விகற்பத்தை அற்புதமாகக் கூறுவதாகும். சமயக் கணக்கர் மதிவழி கூறாது, உலகியல் கூறிப் பொருள் இது என்ற-0 திருவள்ளுவரின் இன்பப் பாலும் தமிழர் மண முறைப்படி அமைக் துள்ளதை ஊன்றி கோக்குவார்க்குப் புலனாகும். இவற்றையெல் லாம் கன்குணர்ந்த நச்சினார்க்கினியரும், யாழோர் கூட்டத்திற்கும் தமிழரின் காமக்கூட்டத்திற்கும் உள்ள வேற்றுமையைக் கந்தரு வர்க்குக் கற்பின்றி அமையவும் பெறும், ஈண்டுக் கற்பின்றிக் களவே அமையாது’ என்று விளக்கியுள்ளார்.” களவியல் உரையாசிரியரின் கருத்து : களவியல் உரை யாசிரியர், களவு என்னும் பெயர்க்குக் கூறியுள்ள காரணத்தையும் ஈண்டு அறிந்துகொள்ள வேண்டியது இன்றியமையாதது. அவர் கருத்துப்படி, மக்கள் தலையாய மக்கள், இடையாய மக்கள், கடையாய மக்கள் என்று மூவகைப்படுவர். எல்லாச் சமயத்தாரும் பெண் இன்பம் தீது என்று கூறியுள்ளனர். அந்த இன்பம் உண்டானால் சுற்றத்தொடர்ச்சி உண்டாகும் , அத்தொடர்ச்சியால் கொலை, வெகுளி, செருக்குப் போன்ற குற்றங்கள் கிகழக்கூடும். இவற்றை எண்ணிப் பார்த்தே தலையாய மக்கள் பெண் இன்பத்தி னின்றும் நீங்குவர். இடையாய மக்கள், பெண்களைப் பற்றி நூல் 9. குறுந்தொகை - 40 10. கல்லாடம் - 14 அடி (20 - 23}. 11. காமத்துப் பாலைப் பெரும்பாலும் வடநூல் வழக்குப் பற்றியும், சிறுபான்மை தமிழர் வழக்குப்பற்றியும் வள்ளுவர் கூறி னார் என்ற பரிமேலழகரின் கருத்து ஏற்கத்தக்கதன்று. - 12. களவியல் - நூற்பா ! - இன் உரை.