பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#62 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை, கள் மூலம் அறிவர். எபண் என்பது, ஒர் எலும்புச் சட்டகம் : காற்றமுள்ள கூடு புழுப் பிண்டம், அது பீளை, மலம், குடல், கொழுப்பு, மூத்திரம் முதலியவற்றின் சார்புடையதேயன்றி ஒரு சிறந்த பொருளன்று அது சிறந்த பொருளாயின் பூ. சாந்து, எண்ணெய் முதலிய அணிகலன்களை அதற்குப் புனைய வேண்டியதில்லை. இவ்வாறு அவர்கள் உடம்பின் அசுபத் தன்மையை எண்ணிப் பெண்ணின்பத்தினின்றும் நீங்குவர். கடையாயினார், எத்திறத்தானும் அவ்வின்பத்தை விட்டு நீங்கார். காரணம், அநாதி காலக்தொட்டுப் பல பிறப்பிடை ஆணும் பெண்ணுமாகப் பழகிப் போகந்துய்த்து வருவதேயாகும். இவர் களையும் பேரின்பத்துச் செலுத்த வேண்டியது அவசியம். எனவே, இவர்கள் ஆணும் பெண்ணுமாக, இவன் பதினாறாட்டைப் பிராயத் தனாய், இவளும் பன்னிராட்டைப் பிராயத்தளாய், ஒத்த பண்பும், ஒத்த கலனும், ஒத்த செல்வமும், ஒத்த கல்வியும் உடையாராய்ப் பிறிதொன்றற்கும் ஊனமின்றிப் போகம் துய்ப்பர். அப்போது, அவர்களிடம் இதைவிடப் பேரின்பம் என்பதொன்றுண்டு என்று கூறினால் அதை எங்ங்ணம் பெறுவது?’ என்று வினவுவர். அப்போது அதனைத் தவத்தால் பெறலாம் என்று கூற வேண்டும். உடனே, அவர்கள் தாமும் தவஞ்செய்து பெறவேண்டும் என்று தவஞ் செய்வர். அப்போது வீடுபேற்றின் இன்பத்தை. விரித்துரைக்க வேண்டும். அவ்வின்பம் பிறப்பு, பிணி, மூப்பு, சாக்காடு, அவலக்கவலை முதலியவையின்றி உள்ளது என்று கேட்டுத் தவமும் ஞானமும் புரிந்து, அதனைப் பெறுவர். இவ்வாறு: அவர்களை வஞ்சித்துக் கொண்டுசென்று நன்னெறிக்கண் செலுத்துவதால் இம்முயற்சிக்குக் களவு என்று பெயரிடப்பட்டது. *களவியல்’ கற்க அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கனையும் பெறலாமென்பது களவியலுரையிாசிரியரின் கருத் தாகும். களவின் கிலைகள் : தமிழ் வழக்காகிய இக்களவு என்னும் கைகோள், நான்கு வகைப்படும் என்று இலக்கண ஆசிரியர்கள் கூறியுள்ளனர். தொல்காப்பியர், ‘காமப் புணர்ச்சியும் இடத்தலைப் படலும் யாங்கொடு தழாஅலுத் தோழியிற் புணர்வுமென்று ஆங்ககால் வகையினும் அடைந்த சார்வொடு மறையென மொழிதல் மறையோர் ஆறே" என்று கூறுவர். காமப்புணர்ச்சி, இடத்தலைப்பாடு, பாங்கற் கூட்டம் 13. செய்யுளியல் நூற்பா - 178.