பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயர்திரு. டி. ரா. புருடோத்தம நாயுடு அவர்கள் (Reader in Tamil, University of Madras) உளங்கனிந்து அளித்த முன்னுரை இலக்கியங்கள் தாம் தோன்றியுள்ள காலத்து மக்களது. சமுதாய வாழ்வினையும் சூழ்நிலையினையும் எடுத்துக்காட்டும். இயல்பின என்பதை ஆய்வாளர்கள் கன்கு அறிவர். பழந்தமிழரின் வரலாற்றைக் காண்பதற்கு இலக்கியங்களையே சான்றுகளாகக் கொள்ளவேண்டும். ஒரு பழைமையின் உண்மையைக் கண்டறி. வதற்கு அகச்சான்று, புறச்சான்று என இருவகைச் சான்றுகள் உள்ளன. புறச்சான்றைவிட அகச்சான்றே சிறந்தது; உண்மை உறைப்பினை உடையது. பண்டைத்தமிழர்களின் வாழ்க்கைமுறை, பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றை நன்கு அறிவதற்குக் கருவி நூல்களாக இருப்பன சங்க இலக்கியங்கள், தொல்காப்பியம் என்ற ஒப்புயர்வற்ற இலக்கணம் ஆகியவை சிறப்பாகக் குறிப்பிடத் தக்கவை. இவற்றை அடிப்படையாகக்கொண்டு பல ஆய்வுநூல்கள் தோன்றியுள்ளன. எனினும், பழந்தமிழ்ப் பண்பாட்டைப் பளிங்கென எடுத்திக்காட்டும் தொல்காப்பியத்தைத் தமிழ்மக்கள் இன்னும் நன்கு தெரிந்துகொள்ளவில்லை. தமிழை முறையாகக் கற்றவர்கள் மட்டிலும் அதனை அறிந்துகொண்டால் போதாது; தமிழ்மக்கள் அனைவருமே அறிந்துகொள்வது மிகவும் இன்றியமையாதது. இந்த நோக்கத்தை அடிப்படையாகக்கொண்டு என் அரிய நண்பர் பேராசிரியர் க. சுப்பு ரெட்டியார், ஒயாது உழைத்து, "தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை என்ற இந்தப் பெரிய நூலை ஆக்கித் தந்துள்ளார். இதில் தமிழ் மக்களின் அறிவுக்கருவூலமாக கின்று சிலவும் தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் ஒன்பது இயல்களும் 33 கட்டுரைகளாகப் பாகுபடுத்தப்பெற்று விளக்கம் பெறுகின்றன. இறுதியிலுள்ள 34 ஆவது கட்டுரை. நூலிலுள்ள கட்டுரைகளின் கருத்துகளைத் தொகுத்துக் கூறுகின்றது; அக்கட்டுரையின் தலைப்பே நூலின் பெயராகவும் அமைந்துள்ளது. அவ்வியல்களில் அடங்கியுள்ள கருத்துகள் எவர் மனத்தையும் எளிதில் பிணிக்கும் வண்ணம் எளிய முறையில் புதிய தலைப்பு களில் புதுக்கோலம் பூண்டுத் திகழ்கின்றன. தமிழ் இலக்கிய மரபுகளை கன்கு அறிந்துகொண்டு தமிழ் இலக்கியங்களைச்சிறப்பாகச் சங்க இலக்கியங்களைச்-சுவைக்க விரும்புவார்க்கு இக் கட்டுரைகள் பெருந்துணை புரியும் என்பதற்கு ஐயம் இல்லை.