பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை என்பது தொல்காப்பிய நூற்பா. காதலர்களைப் பெற்ற தந்தை. தாய், தனையர், மாதுலன் ஆகியோர் கொடைக்குரி மரபினோர்’ என்று இளம்பூரணர் கூறுவர். அவர்கள் இல்லாத சக்தர்ப்பங்களில் சான்றோரையும் தெய்வத்தையும் கொள்வது வழக்கம் என்றும் அவர் குறிப்பிடுவர். கொடுப்பக் கொள்வது கற்பு என்று ஒதினமையால், அது கொடுக்குங்கால் களவு வெளிப்பட்ட வழியும் மெய்யுறு புணர்ச்சியின்றி உள்ளப்புணர்ச்சியான் உரிமை பூண்ட வழியும் கொள்ளப்பெறும் என்பதை அறிதல் வேண்டும். களவுக் காலத்தில் தமரை யறியாது தலைவி தலைவனுடன் சென்று அவன் ஊரில் மணந்துகொள்வதையும் கற்பென்று கொள்ள வேண்டும் என்பது தொல்காப்பியரின் கருத்து. இதனை அவர், கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே புணர்ந்துடன் போகிய காலை யான’** என்ற நூற்பாவில் கூறியுள்ளார். கற்பின் படிகள் : களவொழுக்கத்திலுள்ளது போலவே, கற்பொழுக்கத்திலும் பல படிகள் உள்ளன. இவற்றைத். தொல்காப்பியர், மறைவெளிப் படுதலும் தமரிற் பெறுதலும் இவைமுத லாகிய இயனெறி திரியாது மலிவும் புலவியும் ஊடலும் உணர்வும் பிரிவொடு புணர்ந்தது கற்பெனப் படுமே 9 (மறை களவு: தமர் - உறவினர் : இயல் நெறி . இயற்கை நெறி : மலிவு - மகிழ்தல்.: என்று ஒருவாறு தொகுத்துக் கூறுவர். கரந்து ஒழுகும் ஒழுக்கம் வெளிப்படுதல் தமர் கொடுப்பத் தான் பெறுதல் ஆகிய இரண்டு முதலாகிய இயற்கை கெறியில் தப்பாது மகிழ்தல், புலத்தல், ஊடல், உடல் உணர்தல், பிரிதல் ஆகிய படிகள் கற்பில் உள்ளன என்று கூறுவர் ஆசிரியர். இங்கு மலிதல் என்பது, இல்லொழுக்க மும் புணர்ச்சியும் முதலாயவற்றால் மகிழ்தல். புலவி என்பது, புணர்ச்சியால் வந்த மகிழ்ச்சி குறைவுபடாமல் காலங் கருதிக் கொண்டு உப்ப்பதோர் உள்ள கிகழ்ச்சி. ஊடல் என்பது, உள்ளத்து நிகழ்ந்ததனைக் குறிப்பு மொழியாலன்றிக் கூற்று மொழியால் உரைப்பது. அங்ங்னம் ஊடல் கிகழ்ந்தவழி அதற்கேதுவாகிய 18. ைநூற்பா 2 19. செய்யுளியல் - நூற்பா 179