பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்பவாழ்வின் இருவேறு சிலைகள் 6ァ பொருளின்மை உணர்வித்தல் உணர்வு எனப்படும். இல்லாததனை உண்டோ என ஐயுற்ற மயக்கந்திர உணர்த்துதலால் உணர்த்துதல் எனவும், அதனை உணர்தலால் உணர்வு எனவும் இது வழங்கப் பெறும். புலவியாயின் குளிர்ப்பக் கூறலும் தளிர்ப்ப முயங்கலும் முதலாயவற்றால் நீங்குதலின் அதற்கு உணர்த்துதல தேவை இல்லை. இவ்வாறு பேராசிரியர் என்ற உரையாசிரியர் விளக்கு வர்.20 பிரிவு என்பது இவை கான்கினொடும் வேறுபடுதலின் பிற்கூறினார். இதனை ஊடலொடு வைக்கவே, ஊடலிற்பிறந்த துனியும் பிரிவின் பாற்படும் என்பது கொள்ளப்படும். துணித்தல் என்பது வெறுத்தல் அது காட்டக் காணாது காந்து மாறும் இயல்பினது. அறுவகைப் பிரிவும் பிரிவ் என்பதிலேயே அடங்கும், இந்த இரண்டு கைகோள்களிலும் தலைவன், தலைவி, தோழி முதலியோர் பேசக்கூடிய இடங்களையெல்லாம் தொல்காங்பியர் தொகுத்துக் கூறியுள்ளார். இவற்றையெல்லாம் இங்குக் கூறினால் மிகவும் விரியும். இவர்களுள் களவொழுக்கத்தில் கூற்று நிகழ்த்துதற் குரியோர்யாவர் என்பதையும், கற்பொழுக்கத்தில் கூற்று நிகழ்த்துதற்குரியோர் யாவர் என்பதையும் வரையறை செய்துள் ளார் தொலகாப்பியர். இந்த முறையில் இவர்கள் கூற்றுகள் நிகழும் படியாகத்தான் கவிஞர்கள் பாடல்களை இயற்றுவர். இதுவே: தொல்காப்பியர் வகுத்த இலக்கிய மரபு. பார்ப்பான் பாங்கன் தோழி செவிலி சீர்த்தகு சிறப்பிற் கிழவன் கிழத்தியொடு அளவியல் மரபின் அறுவகை யோரும் களவினில் கிளவிக்கு உரியர் என்ப.* என்ற நூற்பாவால் பார்ப்பான், பாங்கன், தோழி, செவிலி, தலைவன், தலைவி என்பவர்கள் சிறப்பாகக் களவினுள் கூற்று நிகழ்த்துவதற்கு உரியவர்கள் என்பது தெரிகின்றது. மேற்கூறிய அறுவருடன் பாணன், கூத்தன், விறலி, பரத்தை, அறிவர், கண்டோர் ஆகிய அறுவரும் சேர்ந்து கற்பினுள் கூற்று நிகழ்த்து வதற்குரியவர் என்பதைத் தொல்காப்பியர், பாணன் கூத்தன் விறலி பரத்தை யாணஞ் சான்ற அறிவர் கண்டோர் பேணுதகு சிறப்பிற் பார்ப்பான் முதலா 20. செய்யுளியல் நூற்பா 187 (பேராசிரியர் உரை) 21. செய்யுளி - நூற்பா 181.