பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை முன்னுறக் கிளங்த அறுவரோடு தொகைஇத் தொன்னெறி மரபிற் கற்பிற் சூரியவர்.22

கிளந்த - சொன்ன தொகை_இ கூட்டி) என்ற நூற்பாவால் உணர்த்துவர்.

வாயில்கள் உரைக்கும் முறை : அகப்பொருள் ஒழுகலாற்றில் உரையாடுதற்குரிய பாணர் கூத்தர் முதலியோர், தாம் தாம் சொல்லத் தகுவனவற்றைத் தவறின்றி வெளிப்படையாகக் கூறுதல் வேண்டும் என்பது தொல்காப்பியரின் விதி. வாயிற் கிளவி வேளிப்படக் கிளத்தில் தாவின் லுரிய தத்தங் கூற்றே 28 மேற்குறித்த வாயில்கள் அல்லாத தலைமகளும் கற்றாயும் தாம் கூறக் கருதியவற்றை மறைத்துச் சொல்லப்பெறுவர் என்பது *ண்டு அறியத்தக்கது. உரையாசிரியரும், வாயில்களாவார் குற்றேவல் முறையினராதலாலும், வெளிப்படக் கூநாக்கால் பொருள் விளங்காமையானும், பொருள் விளங்காதாயின் இவர் களது கூற்றிற்குப் பயனின்மையானும் அவர்கள் மறைத்துக் கூறாது வெளிப்படவே கூறுதல் வேண்டும் எனவும் விளக்கி புள்ளமை ஈண்டு கருதத்தக்கது . களவுக்காதல் பற்றிய நிகழ்ச்சிகள் உலகிலுள்ள பல மொழி களின் இலக்கியங்களிலும் காணப்பெறுகின்றன. ஆனால், தமிழ்க் கவிதைகளில் சில இலக்கண வரம்புடன் அங்கிகழ்ச்சிகள் சித்திரிக்கப்பெறுவதைப் போலும் திணை, துறை முதலிய ஒழுங்கு கள் அமைந்திருப்பன போலும் பிற காட்டு இலக்கியங்களில் காண முடியாது. இந்த வரையறையுடன் அமைந்த கவிதைகள் உலகில் எம்மொழியிலும் காணப்பெறவில்லை தமிழ் மொழியின், தனிச் சிறப்பு இது. - 22. செய்யுளி - நூற்பா 182, 23. பொருளியல் - நூற்பா 45. 24. பொருளியல் - ைநூற்பாவின் உரை.