பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்கைப் புணர்ச்சி 73 என்று கூறுவர். இங்ங்னம் ஒருவனும் ஒருத்தியும் எதிர்ப்படும் முதற்காட்சிக்கு கல்லூழின் ஆனையே காரணமென்பார் உயர்ந்த பாலதாணையின்’ என்றும், அவ்வூழின் ஆணைக்குக் காரணமாவது: அவ்விருவரும் பண்டைப்பிறப்புகளிற் பயிலியது கெழீஇய நட்பென் பார் ஒன்றியுயர்ந்த பாலதானை என்றும், பல பிறவிகளிலும் பழகிய அன்பின் தொடர்ச்சியே ஒருவரையொருவர் இன்றியமை யாதவராகக் காணுதற்குரிய காதற்கிழமையை வழங்கியதென்பார் ஒத்த கிழவனும் கிழித்தியும் காண்ப’ என்றும் ஆசிரியர் கூறியுள்ள தாக அறிதல் வேண்டும். ஒத்த பருவத்தார் ஒருவரையொருவர் கண்டுழியெல்லாம் புணர்ச்சி வேட்கை தோற்றாமையின், ஒன்றி யுயர்ந்த பாலதாணையிற் காண்ட என்றார் ஆசிரியர். ஈண்டுக் காணுதல் என்றது, தனக்குச் சிறந்தாராகக் கருதுதலை. இக்காட்சிக்குப் பின், இங்ங்னம் தோன்றாகின்ற மாது, திருமகள் முதலாகிய தெய்வமோ, அன்றி, மக்கள் பிறப்பினவோ என்று மயங்கிக் கூறுவது ஐயமாகும். பதுமையைக் கண்ட சீவகன் ஐயப்பட்டதைத் தேவர். வரையின் மங்கைகொல், வாங்கிருந் துரங்குர்ேத் திரையின் செல்விகொல், தேமலர்ப் பாவைகொல், வரையின் சாயல் இயக்கிகொல், யார்கொல் இவ் விரைசெய் கோலத்து வெள்வளைத் தோழியே. (வரைவின் மங்கை - வரைபரமகள் : வாங்கு இரும் துரங்கு நீர்த் திரையின் செல்வி - நீரரமகள் : மலர்ப்பாவை - திருமகள் : உரையின் சாயல் - உரைத்தற்கினிய சாயலையுடைய விரைசெப் கோலம் - மண்ம் கமழும் கோலம்) என்று கூறுவர். இவ்வாறு ஐயம் தோன்றுதற்குத் தொல்காப் பியரும், சிறந்துழி ஐயஞ் சிறந்த தென்ப இழிந்துழி இழிவே சுட்ட லான, ' என்று விதி கூறுவர். இதற்கு இளம்பூரணர் தரும் விளக்கம் மிக கன்றாக அமைந்துள்ளது. ஒருவன் ஒருத்தியைக் கண்ணுற்றுமி அவ்விருவகையும் உயர்வுடையராயின் அவ்விடத்து ஐயம் சிறந்தது. என்று சொல்லுவர். அவர் இழிபுடையராயின் அவ்விடத்து அவள் இழிபினையே சுட்டியுணர்தலான் என்றவாறு. சிறப்பு என்பது. 13. சீவக சிந்தாமணி - 1326. 14. களவியல் - நூற்பா 3. (இளம்)