பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்கைப் புணர்ச்சி アダ மாலை வாடின : வாட்கண் இமைத்தன : காலும் பூமியைத் தோய்ந்தன ; காரிகை, பாலின் தீஞ்சொல் பதுமைஇங்கின்றவள் சோலை வேய்மருள் சூழ்வளைத் தோழியே."8 (காரிகை. அழகு, மருள் - உவம உருபு. வேய் - தோளிற்கு உவமம்.! என்று கூறுவர். தன்னிடம் தோன்றும் ஐயத்தைக் களையும் கருவிகளாகச் சிலவற்றுைக் கூறுவர் தொல்காப்பியர். வண்டே இழையே வள்ளி பூவே கண்ணே அலமரல் இமைப்பே அச்சமென்று அன்னவை பிறவும் ஆங்கண் கிகழ கின்றவை களையும் கருவி என்ப." என்ற நூற்பா இவற்றைக் குறிப்பிடுகின்றது. இதற்கு இளம்பூரணர் தரும் விளக்கம் : 'வண்டாவது, மயிரின் அணிந்த பூவைச் சூழும் வண்டு. அது பயின்றதன் மேலல்லது செல்லாமையின் அதுவும் மக்களுள்ளாள் என்றறிவதற்குக் கருவியாயிற்று. இழை என்பது, அணிகலன். அது செய்யப்பட்டதெனத் தோன்றுதலானும், தெய்வப் பூண் செய்யா அணியாதலானும் அதுவும் அறிதற்குக்கருவியாயிற்று. வள்ளி என்பது, முலையினும் தோளினும் எழுதிய கொடி. அதுவும் உலகின் உள்ளதாகித் தோன்றுதலின் (அதுவும்) கருவியாயிற்று. அலமரல் என்பது, தடுமாறுதல். தெய்வமாயின் நின்ற வழி கிற்கும். அவ்வாறன்றி, கின்று.ழி கிற்கின்றிலள் என்று சுழற்சியும் அறிதற்குக் கருவியாயிற்று. இமைப்பென்பது, கண்ணிமைத்தல். தெய்வத்திற்குக் கண் இமையாமையின் அதுவும் அறிதற்குக் கருவியாயிற்று. அச்சமென்பது, ஆண் மக்களைக் கண்டு அஞ்சுதல். அது தெய்வத்திற்கு இன்மையான் அதுவும் அறிதற்குக் கருவி யாயிற்று. அன்னவை பிறவும் என்றதனான், கால் கிலக்தோய்தல், வியர்த்தல், நிழலாடுதல் கொள்க. இவை கருவியாகத் துணியப் படும் என்றவாறு. இவை வானகத்தனவன்றி வையகத்தனவாகக் கொள்ளுதல் கவி மரபாகும். இவ்வாறு துணிந்த பிறகு, புணர்ச்சி வேட்கை துண்டத் தலைவன் தலைவியைக் கூடுவதற்கு ஆயத்தம் செய்வதைத் க்தேறல் என்று கூறுவர். தேறல் - உணர்ந்ததில் உறுதி 18. சீவக சிங் - 1329, 19. களவியல் - நூற்பா (இளம்.)