உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

தொல்காப்பியம்-நன்னூல்



   (இ-ள்) ஈ, எ, ஏ, ஐ என்று சொல்லப்படும் ஐந்தெழுத்துக் களும் முற்கூறிய அகர ஆகாரங்களைப்போல வாயைத் திறந்து சொல்லுதலாகிய முயற்சியாற் பிறப்பனவாம். அவை அவ்வாறு பிறக்குமாயினும் மேல்வாய்ப் பல்லும் அடி நாவின் ஒரமும் பொருந்தப் பிறக்கும் வேறுபாடுடையனவாம் எறு.
   இவ்வேறுபாட்டினைப் பவணந்தி முனிவர்,
      இஈ எஏ ஜஅங் காப்போ 
      டண்பல் முதல்நா விளிம்புற வருமே. (நன். 77)

எனவரும் சூத்திரத்தாற் குறிப்பிடுவார்.

     உஊ ஒஒ ஒளவென விசைக்கும் 
     அப்பா லைந்தும் இதழ்குவிந் தியலும். தொல். 87)

இதுவும் அது.

   (இ-ள்) உ, ஊ, ஒ, ஓ, ஒள என்ற ஐந்தெழுத்துக்களும் இதழ்குவித்துக்கூறும் முயற்சியாற் பிறப்பனவாம் எறு.
     உஊ ஒஒ ஒளவிதழ் குவிவே. (நன். 78)

எனவரும் நன்னூற் சூத்திரம் இவ்விதியைச் சுருங்க உரைத்தல் காண்க.

     தத்தந் திரிபே சிறிய வென்ப. (தொல், 88)
   இது முற்கூறிய உயிரெழுத்துக்களுக்கும் மேற்கூறப்படும் மெய்யெழுத்துக்களுக்கும் சிங்கநோக்காக ஓர் புறனடை கூறுகின்றது.
   (இ~ள்) உயிரெழுத்துக்களிலும் மெய்யெழுத்துக்களிலும் ஒவ்வோரிடங்களுட் பிறப்பனவாகப் பலஎழுத்துக்கள் சேர்த்துக் கூறப்பட்டனவாயினும் நுண்ணுணர்வினால் ஆராயுமிடத்து அவ்வெழுத்துக்கள் தம்மிடையே சிறிய சிறிய வேறுபாடுகளை யுடையன என்பர் புலவர் (அவ்வேறுபாட்டினை நுண்ணறிவால் அறிந்துகொள்க எறு.
   எடுத்தல், படுத்தல், நலிதல், விலங்கல், என்பனவற்றாலும், தலைவளி, மிடற்றுவளி நெஞ்சுவளி மூக்குவளி என்பன வற்றாலும் அவை தம்முள் வேறுபாடுடையனவாமெனவும், ஐ விலங்கலுடையது, வல்லினம் தலைவளியுடையது, மெல்லினம் மூக்குவளியுடையது, இடையினம் மிடற்றுவளியுடையது எனவும், பிறப்பு ஒன்றாகச்சொல்லப்பட்ட எழுத்துக்களிடையே