உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிறப்பியல் 93

அமைந்த நுண்ணிய வேறுபாடுகளை அறிந்து கொள்ளுதற்கு வழி கூறுவர் நச்சினார்க்கினியர்.

     ககார ங்காரம் முதல்நா அண்ணம். (தொல், 89) 
   இது முதல் 99 வரையுள்ள பதினொரு சூத்திரங்களால் மெய்யெழுத்துக்களின் சிறப்புப்பிறவி கூறுகின்றார்.
   (இ-ள்) ககரமும் ங்கரமும் நாவின் அடிப்பகுதியும் அண்ணத்தின் அடிப்பகுதியும் பொருந்தப் பிறக்கும் எறு.
   முதல் நா, முதல் அண்ணம் என முதல் என்பதனை இரண்டிடத்தும் கூட்டிப் பொருள்கொள்க.
     சகார ஞகாரம் இடைநா அண்ணம். (தொல், 90) 

(இ-ள்) சகரமும் ஞகரமும் நாவின் நடுவும் அண்ணத்தின் நடுவும் பொருந்தப் பிறக்கும் எறு.

   இடைநா, இடை யண்ணம் என இயையும்.
     டகார ணகார நுனிநா அண்ணம். (தொல். 91) 
   (இ-ள்) டகரமும் னகரமும் நாவினது நுனியும் அண்ணத்தினது நுனியும் பொருந்தப்பிறக்கும், எறு.
   நுனிநா, துனியண்ணம் என இயையும்.
     அவ்வா றெழுத்தும் மூவகைப் பிறப்பின. (தொல். 92,) 
   89, 90, 91 ஆகிய மூன்று சூத்திரங்களுக்கும் பொருள் கொள்ளுங்கால், ககரம் முதல் நாவிலும் ங்கரம் முதலண்ணத்தி லும், சகரம் இடைநாவிலும் ஞகரம் இடையண்ணத்திலும், டகரம் துனிநாவிலும் ணகரம் நுனியண்ணத்திலும் பிறக்கும் என இவ்வாறு நிரல் நிறை வகையாற் கொண்டு இவற்றை அறுவகைப் பிறப்பினவாகக் கூறலாமோ என ஐயுறுவாரை நோக்கி, அம்மூன்று சூத்திரங்களிலும் கூறப்பட்ட ஆறெழுத்துக்களும் அறுவகைப் பிறப்பினையுடையன அல்ல அவை மூவகைப் பிறப்பினை உடையனவே என இச்சூத்திரத்தால் ஆசிரியர் ஐயமகற்றுகின்றார்.
   (இ-ள்) மேற் கூறப்பட்ட ஆறெழுத்துக்களும் மூவகையாகிய பிறப்பினையுடையனவே (அறுவகைப் பிறப்பினை அல்ல), எ-று. 
   க, ங், இரண்டும் முதல்நா முதலண்ணத்தையும் ச, ஞ, இரண்டும் இடைநா இடையண்ணத்தையும், ட, ண இரண்டும் நுனிநா நுனியண்ணத்தையும் பொருந்தப் பிறக்குமென மேற் கூறிய நான்கு சூத்திரங்களின் பொருளையும் நன்னூலாசிரியர்,