உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிறப்பியல் 95

   அண்ணத்தின் நடுவிடத்தே நாவினது நுனி பொருந்த றகரமும், அது பிறக்குமிடத்திற்குச் சிறிது கீழே னகரமும் பிறக்குமென்பார், றகரத்தை முன்னரும் னகரத்தை அதன் பின்னரும் வைத்துரைத்தார் ஆசிரியர். இந்துட்பத்தை உணர்ந்த நச்சினார்க்கினியர் ற ன இவற்றின் வேறுபாடுணர்க என்ற தொடரால் இதனைப்புலப்படுத்தியுள்ளார்.
     
     அண்ணம் நுனிநா நனியுறிற் றனவரும். நன். 86) 

என்பது நன்னூல்.

     நுனிநா வனரி யண்ணம் வருட 
     ரகார ழகாரம் ஆயிரண்டும் பிறக்கும். (தொல், 95) 
   (இ-ள்) நாவினது நுனியானது மேல்நோக்கிச் சென்று அண்ணத்தைத் தடவ ரகார ழகாரமாகிய அவ்விரண்டும் பிறக்கும் (எ-று.
     அண்ணம் நுனிநா வருட ஏழவரும். நன். 83)

என்பது நன்னூல்.

     நாவிளிம்பு விங்கி யண்பல் முதலுற 
     ஆவயின் அண்ணம் ஒற்றவும் வருடவும் 
     லகார ளகாரம் ஆயிரண்டும் பிறக்கும். (தொல், 95) 
   (இ-ள்) நாவினது ஒரமானது மேலுயர்ந்து தடித்து மேல் வாய்ப் பல்லினது அடியிலே பொருந்தி நின்று அவ்விடத்து அண்ணத்தைத் தொட்ட அளவில் லகரமும், அண்ணத்தைத் தடவிய நிலையில் ளகரமும் பிறப்பனவாம் எறு.
   விளிம்பு-ஓரம். வீங்குதல்-முன் மெல்லியதாயிருந்த நாவின் ஒரம் மேல்நோக்கி வளைந்து நிற்கும்போது நாவின் மற்றையிடத் திலுள்ள தசைகளும் சேர்ந்து சிறிது பருத்து திற்றல். இவ்வாறு தடித்த நாவினிம்பு அண்ணத்திற்கும் பல்லினது அடிக்கும் இடைப்பட்டு நிற்றல் லகார ளகாரமாகிய அவ்விரண் டெழுத்துக்களுக்கும் பொதுவாக வேண்டப்படும் முதற் செயலாதலின், அவ்விரண்டிற்கும் பொருந்த நாவினிம்பு வீங்கி அண்பல் முதலுற’ என அச்செயலை முதலிற் பிரித்துக் கூறினார். அவ்விரண்டற்குந் தனித்தனி வேண்டப்படும் சிறப்புத் தொழில்களாகிய ஒற்றுதலையும் வருடுதலையும் முறையே லகரத்திற்கும் ளகரத்திற்கும் உரியனவாக நிரல் நிறையாற் கூறினார்.
   இதன் பொருளை நன்கறிந்த பவணந்தி முனிவர்,