இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
96
தொல்காப்பியம்-நன்னூல்
அண்பல் முதலும் அண்ணமு முறையின் நாவினிம்பு வீங்கி ஒற்றவும் வருடவும் லகார ணகாரம் ஆயிரண்டும் பிறக்கும். (நன். 84)
எனச் சூத்திரஞ் செய்தார். இதனால் அண்பல் முதலை நாவினிம்பு வீங்கி ஒற்ற லகாரம் பிறக்குமெனவும், அண்ணத்தை நாவிளிம்பு வீங்கி வருட ளகாரம் பிறக்குமெனவும் பொருள் இனிது விளங்குதல் காண்க.
இதழியைந்து பிறக்கும் பகார மகாரம். (தொல். 97)
(இ-ள்) மேலுதடும் கீழுதடும் தம்மிற் கூடப் பகாரமும் மகாரமும் பிறக்கும் எறு.
மீ கீ ஜிதழுறப் பம்மப் பிறக்கும். (நன். 81)
என்பது நன்னூல்,
பகரமும் மகரமும் இரண்டும் உதடும் பொருந்துதலாகிய ஒரு முயற்சியாற் பிறக்குமாயினும் பகரம் உள்ளிருந்து வருங் காற்றாற் பிறத்தலும், மகரம் மூக்கு வளியாற் பிறத்தலும் என இவை தம்முள் வேற்றுமையாம்.
பல்லித ழியைய வகாரம் பிறக்கும். (தொல். 98)
(இ-ள்) மேற்பல்லும் கீழுதடும் தம்மிற் பொருந்த வகரம் பிறக்கும், எ-து.
மேற்பல் லிதழுற மேவிடும் வவ்வே. (நன். 85)
என்னும் நன்னூற் சூத்திரம் இச்சூத்திரப் பொருளை விரித்துரைப்பதாகும்.
அண்ணஞ் சேர்ந்த மிடற்றெழு வளியிசை கண்ணுற் றடைய யகாரம் பிறக்கும். (தொல். 99)
(இ-ள்) அண்ணத்தை நாச்சேர்ந்த விடத்து மிடற்று வளியானாகிய ஒசையானது அவ்வண்ணத்தை யணைந்து இறுகச் செறிய யகரம் பியக்கும் எ_று.
இதன்கண் அண்ணஞ் சேர்ந்த என்புழிச் சேர்தற்கு வினை முதலாக நாவென்பதனை வருவித்து, அண்ணம் நாச்சேர்ந்தகண் மிடற்றெழுவளி உற்று அடைய யகரம் பிறக்கும் எனக் கொண்டு கூட்டி உரை கூறுவர் இளம்பூரணர். சேர்ந்த என்னும் வினைக்கு நாவென்பதனை வினைமுதலாக வருவித்துரையாமல் மிடற்றெழு வளியினையே வினைமுதலாகக் கொண்டு, எழுவளி மிடற்றுச் சேர்ந்த இசை அண்ணங் கண்ணுற்று அடைய யகாரம்