உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிறப்பியல் 93

முயற்சியாக்கி அங்கா முயற்சி யென்றும் பவணந்தியார் கூறியது ஆராய்தற்குரியதாகும்.

     எல்லா வெழுத்தும் வெளிப்படக் கிளந்து 
     சொல்லிய பள்ளி யெழுதரு வளியிற் 
     பிறப்பொடு விடுவழி யுறழ்ச்சி வாரத் 
     தகத்தெழு வளியிகை யரில்தட நாடி 
     யளயிற் கோட லந்தனர் மறைத்தே
     அதிவ னுவலா தெழுந்துபுறத் திசைக்கும் 
     மெய்தெரி வளியிகை யளவுருவன் றிசினே. (தொல், 102,
   இது மேற்கூறிய எழுத்துக்களின் பிறப்பிற்குப் புறனடை கூறுகின்றது. இதனை இளம்பூரணர் இரு சூத்திரங்களாகப் பிரித்துப் பொருள் கூறியுள்ளார். பொருளியைபு கருதி ஒரு சூத்திரமாகக் கொண்டார் நச்சினார்க்கினியர்.
   (இ~ள்) எல்லா வெழுத்துக்களையும் வெளிப்பட விதந்து சொல்லப்பட்ட இடத்தின் கண்ணே எழுகின்ற காற்றில் பிறப்போடு விட்டுச் சொல்லுமிடத்து உந்தியிலிருந்து எழுங் காற்றானது தலையளவுஞ்சென்று மீண்டும் நெஞ்சின்கண் நிலை பெறுதலாகிய திரிதருங் கூறுபாட்டினையுடையதாக உள்ளிருந் தெழும் வளியாலாய இசையைக் குற்றமற ஆராய்ந்து மாத்திரை வரையறையால் அளந்து கொள்ளுதல் அந்தணரது மறைநூற் கண்ணதாகிய முறையாகும். அம்முறையினை இந்நூலிற் சொல்லாது எல்லார்க்கும் புலனாகப் புறத்துப்போந்து ஒலிக்கும் மெய் தெரிவளியிசையாகிய எழுத்துக்களுக்குரிய மாத்திரை யினையே ஈண்டுக் கூறினேன் எ-று.
   உந்தியிலிருந்தெழுங் காற்று முன்னர்த் தலைக்கட் சென்று பின்னர் மிடற்றிலே வந்து அதன்பின் நெஞ்சிலே நிற்றலை உறழ்ச்சிவாரம் என்றார். உறழ்ச்சி வாரம் - திரியுங் கூறுபாடு. இக்கூறுபாட்டினை ஆசிரியர் தலையினும் மிடற்றினு நெஞ்சினு நிலைஇ என்ற தொடரால் முன்னர் விளக்குதல் காண்க. அகத் தெழு வளியிசை-மூலாதாரத்திலிருந்து தோற்றும் காற்றோசை மெய்தெரிவளியிசை-எல்லார்க்கும் எழுத்துருவம் இதுவெனப் புலனாமாறு வாயின் புறத்தே வெளிப்பட் டிசைக்கும் எழுத் தோசை, உள்ளிருந்தெழுங் காற்று தலைக்கட் சென்று மிடற்றிற்கு வந்து நெஞ்சிலே நிலைபெறுமளவும் காற்றாயிருந்து, பின்னர் அது நெஞ்சிலிருந்து வெளிப்படும் பொழுதெல்லாம் காற்றின்