உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புணரியல்

101


     எல்லா மொழிக்கும் இறுதியு முதலும் 
     மெய்யே யுயிரென் றாயி ரியல. (தொல், 103) 
   இது மொழிமரபில் விரித்துக்கூறிய மொழிமுதல் எழுத்துக்கள், மொழிக்கீறாம் எழுத்துக்கள் என்பனவற்றைத் தொகுத்து உணர்த்துகின்றது.
   (இ-ள்) மேற் கூறப்பட்ட முப்பத்துமூன்று எழுத்துக்களை முதலாகக் கொண்டும் இருபத்து நான்கு எழுத்துக்களை இறுதியாகக் கொண்டும் வழக்குநெறிக்கண் நிலைபெற்று நடக்கும் எல்லா மொழிகளுக்கும் இறுதியும் முதலுமாவன மெய்யும் உயிருமாகிய அவ்விரண்டு இயல்பினையுடையன எ_று. 
   (உ-ம்) மரம், இலை, ஆல், விள என மெய்யும் உயிரும் முதலும் ஈறும் ஆயின.
   பன்னிரண்டுயிரும், க த ந ப ம ச ஞ ய வ என்னும் ஒன்பது மெய்களும், துந்தையென்புழி நகரமெய்யின் மேல் வரும் குற்றுகரமும் ஆகிய இருபத்திரண்டு எழுத்துக்களும் மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்களாகும். பன்னிரண்டுயிரும் ஞ ண ந ம ன ய ர ல வ ழ ள என்னும் பதினொரு மெய்களும், ஈற்றுக் குற்றியலுகரமும் ஆக இருபத்துநான்கெழுத்துக்களும் மொழிக்கு ஈறாம் எழுத்துக்களாம்.
     அவற்றுள் 
     மெய்யி றெல்லாம் புள்ளியொடு நிலையல். (தொல். 104) 
   இது மேற்குத்திரத்திற் கூறியவாற்றால் தனிமெய்யும் மொழிக்கு முதலில்வரும் என எய்திய கருத்தினை விலக்குதலின் ‘எய்தியது விலக்கல் நுதலிற்று என்பர் உரையாசிரியர்.
   (இ-ள்) மேல் மெய்யும் உயிரும் என்று கூறிய இரண்டனுள் மொழிக்கு ஈறாகிய மெய்யெல்லாம் புள்ளி பெற்று நிற்கும் எறு.
   எனவே மொழிக்கு முதலில்வரும் மெய்யெல்லாம் புள்ளி யிழந்து உயிரோடு கூடிநிற்கும் என உய்ந்துணர வைத்துத் தனிமெய் மொழிக்கு முதலாகாதென விலக்கினாராயிற்று.
   மொழிமுதல்மெய் புள்ளியோடு நில்லாதென்னாது ஈறெல்லாம் புள்ளியொடு நிலையல் என ஈற்றின்மேல் வைத்துக் கூறிய அதனால் அவ் வீற்றின்மெய் உயிர் முதன்மொழி வந்த விடத்து அஃதேற இடங்கொடுக்கு மென்பது பெறப்பட்ட தென்பர் இளம் பூரணர். இக்கருத்தினை நன்னூலார்,